districts

img

பெரமங்கலம் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருக! சிபிஎம் தொடர் முழக்கப் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 1 - திருச்சி புறநகர் மாவட்டம் முசிறி ஒன்றியம் பெரமங்கலம் ஊராட்சியில் காவிரி குடிநீர், தெருவிளக்கு, சாலை  வசதி, தண்ணீர் தொட்டி, மயானத் திற்கு மின்சாரம், தண்ணீர் வசதி, ரேசன் கடைக்கு புதிய கட்டிடம், சுகாதார வளா கத்திற்கு சுற்றுச்சுவர் மற்றும் அடிப் படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி அலுவலகம் முன்பு  தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற் றது.  போராட்டத்திற்கு பெரமங்கலம் கிளைச் செயலாளர் அசோக், மணியம் பட்டி கிளைச் செயலாளர் சுப்பிரமணி யன், குருவிகாரன்குளம் கிளைச் செய லாளர் கே.சிவக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஒன்றியக் குழு  உறுப்பினர் டி.ரமேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.பழநிசாமி, ஜெ.சுப்ரமணியன், மூத்த  தோழர் வீராசாமி, ஒன்றியக்குழு உறுப் பினர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.  முசிறி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ்மோகன், வட்டார துணை வளர்ச்சி  அலுவலர் ஜெயபாலன், ஊராட்சி செய லாளர் பார்த்திபன், கிராம நிர்வாக அலு வலர், காவல் உதவி ஆய்வாளர் தமிழ் செல்வன் ஆகியோர் பேச்சு வார்த்தைக்கு அழைத்ததன் பேரில்  போராட்ட களத்திலேயே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  அதில் 15 நாட்களில் அன்பு நகருக்கு  காவிரி குடிநீர் தரவும், ஊராட்சி முழு வதும் தெருவிளக்கு அமைக்கவும், சாலைகளை 2 மாதம் முதல் 6 மாதத் திற்குள் அமைக்கவும், புதிய ரேசன் கடை, புதிய ஊராட்சி அலுவலக கட்டி டத்தை 3 மாதத்திற்குள்ளும் கட்டி தரு வதற்கு அரசு அதிகாரிகள் உறுதிய ளித்து ஒப்பந்தம் செய்தனர். இதனால் போராட்டம் முடிவுற்றது.

;