திருச்சிராப்பள்ளி, ஏப்.25-
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலி யுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்தில் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஜான்சி மகாராணி தலைமையில் நடைபெற்ற கோரிக்கை முழக்கப் போராட் டம் நடத்தினர்.
திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் ராமசந்திரன், அஜ்மல்கான், வின்சன்ட் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.