districts

பொதுத்தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர்களுடன் ஆலோசித்த ஆட்சியர்

மயிலாடுதுறை, செப்.15- மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 2022-  2023- ஆம் ஆண்டில் 10-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வில் தேர்ச்சி  விகிதம் அதிகரிப்பது தொடர்பான தலைமையாசி ரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  இரா.லலிதா  தலைமை யில்  நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  பேசியதாவது:  தமிழ்நாட்டில் 2022-23-ஆம் ஆண்டில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 100  சதவீதம் மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெறவேண்டும். அதற்காக தலை யாசிரியர்கள்,ஆசிரியர்கள் கடுமையாக முயற்சி செய்யவேண்டும்.   அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  ரேணுகா, மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலர் சீத்தா லெட்சுமி, சீர்காழி மாவட்டக் கல்வி அலு வலர் செல்வராஜ் மற்றும் தலைமையாசி ரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;