மயிலாடுதுறை, ஜூன் 7 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் 4 ஆவது வட்ட கிளை மாநாடு சங்கத்தின் வட்டத் தலை வர் கவிஞர் ப.ராஜாராமன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் சு.கருணா நிதி, வட்டத் துணைத் தலைவர் அண்ணாதுரை, வட்ட செயலாளர் கே.செல்வராஜ் ஆகியோர் உரை யாற்றினர். செம்பனார்கோவில் ஊராட்சியை பேரூராட்சி யாக தரம் உயர்த்த வேண்டும். மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையேயான ரயில் சேவையை மீண்டும் துவக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் புதிய வட்ட தலைவராக ப.ராஜா ராமன், செயலாளராக கே.செல்வராஜ், துணை தலைவர்களாக முத்துகுமாரசாமி, அண்ணாதுரை, இணை செயலாளர்களாக நாகப்பன், வன்மீக லிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினராக சரோஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகி களை அறிவித்து மாவட்டத் தலைவர் வ.பழனி வேலு நிறைவுரையாற்றினார்.