districts

img

காதல் திருமணம் செய்து கொண்டவர்களை கட்டப்பஞ்சாயத்து செய்த காவல்துறை

சேலம், ஜூலை 08- காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை பிரித்து பெண்ணை தனி யார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்து சேலம் அஸ்தம்பட்டி காவல்துறை யினர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ள தாக புகார் எழுந்துள்ளது. சேலம் மணக்காடு மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஸ்ரீமான் (20), தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நிவேதா ஸ்ரீ (20) என்றவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனியன்று அரியானூர் விநாயகர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு வந்து ள்ளனர். இதனிடையே, நிவேதா ஸ்ரீ யின் தாய் அபிராமி கன்னங்குறிச்சி காவல் நிலையத்தில் தனது மகளை காண வில்லை என புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் பெண்ணை தேடிய போது ஸ்ரீமான் திருமணம் செய்து கொண்டது தெரி யவந்தது. இதனையடுத்து அஸ்தம் பட்டி காவல் நிலையத்தில் திருமணம் செய்த இருவரையும் மணமகனின் பெற் றோர் ஒப்படைத்துள்ளனர். இதனிடையே, கன்னங்குறிச்சி போலீசார் நிவேதா ஸ்ரீ யை ஏற்காடு அடி வாரம் அருகே உள்ள தனியார் காப்பக மான புத்த மடம் காப்பகத்தில் சேர்த்துள் ளனர். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் வீட்டார் பாமக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளுடன் காப்பகம் சென்று, வீட்டுக்கு வரச் சொல்லியும், இல்லையென்றால் திருமணம் செய்து கொண்ட வாலிபரை கொலை செய்து விடுவதாக அப்பெண்ணை மிரட்டி உள்ளனர்.  இதனை அடுத்து வாலிபர் ஸ்ரீமான் மற்றும் தாயுடன் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். இது குறித்து ஶ்ரீமானின் பாட்டி செய்தி யாளரிடம் கூறுகையில், எனது பேரன் ஸ்ரீமான் திருமணம் செய்து கொண்ட நிவேதா ஸ்ரீயின்  உறவினர்கள் பாம கவை சேர்ந்தவர்கள், அவர்கள் பெண்ணை வீட்டுக்கு அனுப்ப வேண் டும் என்றும் இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டினர். திருமணம் செய்த கையோடு மணமக்கள் இருவரையும் காவல் நிலை யத்திற்கு அழைத்து வந்து முறைப்படி நாங்கள் விட்டோம். ஆனால் காவல்து றையினர் பெண்ணை தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தது எப்படி சரியாகும். அருகிலேயே அரசு காப்பகம் இருக்கும் போது ஏன் தனியார் காப்ப கத்தில் காவல்துறையினர் ஒப்படைத்த னர் எனவும் கேள்வி எழுப்பினர்.  ஸ்ரீமானின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் கொலை மிரட்டு விடுத்த பாமக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்து காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.