districts

img

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.27- திமுக அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளின்படி புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்து ணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம  உதவியாளர்கள், ஊராட்சி செய லாளர்கள், ஊர்ப்புற நூலகர் கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப் பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்  காலமாக அறிவிக்க வேண்டும். கொரோனா காலத்தில் முடக்கப் பட்டுள்ள சரண் விடுப்பை மீண்டும்  வழங்க வேண்டும். ஒன்றிய அரசு வழங்கியுள்ள அகவிலைப்படியை  1.7.2022 முதல் தமிழக அரசு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தஞ்சாவூர், கும்பகோணம்,  பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, பூதலூர் உள்ளிட்ட 9 வட்டங்களில் சுமார் 50-க்கும்  மேற்பட்ட இடங்களில் அரசு அலு வலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருச்சி மாவட்டத்தில் 11 ஒன்றி யங்களில் 56 மையங்களில் அரசு  அலுவலகங்கள் முன்பு செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. திருச்சி 1 வட்டக்கிளை சார்பில் இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மருத்துவமனை, பட்டு வளர்ச்சி துறை அலுவலகம், இணை இயக்கு நர் மருத்துவம் மற்றும் சுகாதா ரப்பணிகள் அலுவலகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலு வலகம், நீதிமன்ற வளாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கம், மாவட்ட கருவூல அலுவல கம், பொதுப் பணித்துறை அலுவல கம், மருத்துவக் கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இஎஸ்ஐ மருத்துவமனை முன்பு வட்டக்கிளை தலைவர் சுரேஷ் பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலை வர் பால்பாண்டி துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் பழனிச்சாமி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பேசினார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரை ஆற்றினார். திருச்சி 2, திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி, முசிறி, துறையூர், ஸ்ரீரங்  கம் ஆகிய வட்டக் கிளைகளில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் கூட்டுறவு துறை,  வணிகவரித்துறை, இந்து சமய  அறநிலையத்துறை, தொழிலக பாதுகாப்புத் துறை, வேளாண்மை துறை அலுவலகம், சாந்தப் பிள்ளை கேட், தோட்டக்கலைத் துறை, காட்டுத்தோட்டம், ராசா மிராசுதார் மருத்துவமனை, மாநகராட்சி, கால்நடைத் துறை வட்டாட்சியர் அலுவலகம் பனகல்  கட்டிடம் உள்ளிட்ட 25-க்கும் மேற் பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டங்களில் மாநிலச்  செயலாளர் எஸ்.கோதண்ட பாணி, மாவட்ட பொருளாளர் கே. பாஸ்கரன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநி லச் செயலாளர் எஸ்.ஹேமலதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் பா.முருகன், ச.தமிழ்வாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பூதலூர், திருவையாறு, பாப நாசம், அம்மாபேட்டை, கும்ப கோணம், திருப்பனந்தாள், திரு விடைமருதூர், ஒரத்தநாடு, திரு வோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி உட்பட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்  கொண்டம் தாலுகா அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்க மாவட்டச் செயலா ளர் வேல்முருகன் தலைமை வகித்தார். வருவாய்த் துறை அலு வலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சிறப்புரையாற்றி னார்.

;