districts

img

சிபிஎம் போராட்டம் வெற்றி தனியாருக்குச் சொந்தமான இடத்தில் கட்டுமானப் பணியை நிறுத்திய நகராட்சி

புதுக்கோட்டை, ஜூலை 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  போராட்டத்தை தொடர்ந்து தனியா ருக்கு சொந்தமான இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமானப் பணியை நிறுத்தியது புதுக் கோட்டை நகராட்சி. புதுக்கோட்டை அசோக் நகரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவ தற்கு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்  ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட இடத்தை வேறு தனி நபர்  ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அந்த இடத்தை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார  நிலையம் கட்டுவதற்குப் பதிலாக, தனி யாருக்குச் சொந்தமாக இடத்தை ஆக்கி ரமித்து சுகாதார நிலையம் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற் கொண்டது. இந்த இடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்  எம்.ஜியாவுதீன் மனைவிக்கு சொந்தமா னது. இத்தகைய அராஜக நடவடிக்கையை  கண்டித்து செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை நகராட்சி அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் தயாராகினர்.  தொடர்ந்து நகராட்சி ஆணையர் சியாமளா பேச்சுவார்த்தைக்கு அழைத் தார். இந்தப் பேச்சுவார்த்தையில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், நகர காவல் ஆய்வாளர் மருது உள்ளிட்டோர் பங்கேற்றனர். உரிய ஆவணங்களை சுட்டிக்காட்டி  பிரச்சனைக்குரிய இடம் ஜியாவுதீன் மனைவி நூர்ஜகானுக்குச் சொந்தமா னது என்பதை சிபிஎம் தலைவர்கள் முன் வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட அதி காரிகள், “விரைவில் உயர் அதிகாரிகள்  முன்னிலையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு  காண்பது எனவும், அதுவரை கட்டு மானப் பணிகளை நிறுத்துவது” எனவும்  உறுதியளித்தனர்.  இதனைத் தொடர்ந்து போராட்டம்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவ தாக அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.

;