பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட டமயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு அரசுக்கல்லூரியில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் உயர்த்தப்பட்ட கட்டண நகலை கிழித்தெறிந்து போராட்டம் நடத்தினர். மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்டக்குழு உறுப்பினர் பிரவீன், சந்தோஷ், அபி, ஐஸ்வர்யா, சத்தியா, சுருதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.