districts

img

20 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மயிலாடுதுறை, செப்.26 - தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள் முதல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்  செயலாளர் சாமி.நடராஜன் வலியுறுத்தி யுள்ளார். மயிலாடுதுறையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் செய்தியா ளர்களை சந்தித்து கூறியதாவது: தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, கடலூர்  மாவட்டத்தில் ஒரு பகுதி, புதுக் கோட்டை மாவட்டத்தில் ஒரு பகுதி ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை  அறுவடை வேகமாக நடைபெற்று வரு கிறது. மேட்டூர் அணையில் இந்தாண்டு முன்கூட்டியே நீர் திறக்கப்பட்டதால் அரசு நிர்ணயித்த இலக்கையும் தாண்டி குறுவை சாகுபடி பரப்பளவு அதிகமாக  செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவு திறக்கப்படவில்லை.  திறக்கப்பட்ட நிலையங்களிலும் விவசாயிகளிடமிருந்து கொள் முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள்  உடனுக்குடன் சேமிப்பு கிடங்கு களுக்கு அனுப்பி வைக்கப்படாததால் நெல் மூட்டைகள் ஒவ்வொரு மையங்க ளிலும் தேங்கிக் கிடக்கின்றன. எனவே  விவசாயிகள் கோரக்கூடிய இடங்களில்  நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். கூடுதல் பரப்பள வில் குறுவை சாகுபடி நடைபெற்றுள்ள தால் நடமாடும் கொள்முதல் நிலையங் களை துவக்கி அதிகப்படுத்திட வேண்டும்.  தற்போது விவசாயிகளிடம் உள்ள முக்கிய பிரச்சனையான 17 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது என்பது ஏற்புடையதல்ல. மழைக்காலம் என்பதால் தமிழக அரசு ஒன்றிய அரசிடம் ஒப்புதல் பெற்று 20 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண்டும். நான்கு வழிச் சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு உரிய இழப் பீட்டை வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங் களில் சுமார் 4.5 லட்சம் ஏக்கர் விவசாய  நிலங்களின் நீர் ஆதாரமான பரப்பிக் குளம் - ஆழியாறு நடு மதகில் உடைப்பு  ஏற்பட்டது. 6 டிஎம்சி தண்ணீர் வீணாகி வருகிறது.

இதுவரை அந்த உடைப்பு சரிசெய்யப்படவில்லை. இதற்காக உயர்மட்ட விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த குழு விசாரித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இதை முன்னுதாரணமாக கொண்டு  தமிழகத்தில் உள்ள அனைத்து அணை களின் உறுதித் தன்மையை ஆராய  சிறப்பு வல்லுநர் குழுவை அமைத்து, போர்க்கால அடிப்படையில் ஆய்வு  மேற்கொள்ள வேண்டும் என சங்கத் தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லத்தில் ஓஎன்ஜிசி புதிதாக திட்டங்களை  துவங்குவது குறித்த செய்தியாளர் களின் கேள்விக்கு சாமி.நடராஜன் பதிலளிக்கையில் “கடந்த வாரம் நாகை யில் நடந்த  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.  காவிரி டெல்டா மாவட்டங்கள் என்பது  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லம் என சட்டமன்றத்தில் சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அந்த சட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்ட லத்தில் ஏற்கனவே ஓஎன்ஜிசி மூலம்  செயல்படக்கூடிய திட்டங்கள் மட்டுமே  அனுமதிக்கப்படும்.  ஓஎன்ஜிசியால் மூடப்பட்ட கிணறு கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படக் கூடாது. புதிய திட்டங்களான மீத்தேன்,  ஷேல்கேஸ், டைட் கேஸ், ஹைட்ரோ கார்பன் எதுவும் எடுக்கக்கூடாது என  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்  என்ற சட்டத்திலேயே தெளிவாக உள்ளது. அந்த சட்டத்தை முழுமை யாக தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்பதே தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் நிலைப்பாடு. அதை மீறி ஓஎன்ஜிசியோ வேறு எந்த நிறுவ னங்களோ அந்த பணிகளை துவங்கி னால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  அந்த இடத்திற்கே சென்று போராட் டத்தை நடத்தி தடுத்து நிறுத்தும் என்றார். சங்கத்தின் மாநில துணைச் செய லாளரும், மயிலாடுதுறை மாவட்ட செய லாளருமான எஸ்.துரைராஜ், மாநிலக் குழு உறுப்பினர்கள் டி.சிம்சன், பி.குண சுந்தரி, மாவட்ட பொருளாளர் எம். செல்லப்பா ஆகியோர் உடனிருந்தனர்.

;