districts

img

4 வழிச்சாலையால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு, பட்டா, தற்காலிக குடியிருப்பு வழங்கப்பட்டது

மயிலாடுதுறை, ஆக.27 - மயிலாடுதுறை மாவட்டம், திருக் கடையூரை ஒட்டியுள்ள வெள்ளக்குளம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால், நான்கு வழிச்சாலையால் வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடும், பட்டா இடமும், தற்காலிக குடியிருப்புகளும் வழங்கப்பட்டன. விழுப்புரம் முதல் நாகை வரை  நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலை அமையவுள்ள பகுதிகளிலுள்ள விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில், நகாய்  அதிகாரிகளும் ஒப்பந்த நிறுவனமும் விவசாயிகளை மிக கேவலமாக நடத்தின.  இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவ சாயிகள்,  பல்வேறு போராட்டங்களை நடத்திய நிலையில்  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அப்பிரச்சனையை கையிலெடுத்து பிரச்சார இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை நடத்தியது. அதிகாரிகள் உரிய இழப்பீடுத் தர உறுதி யளித்து அப்பணிகள் நடந்து வரும்  சூழலில், திருக்கடையூர் வெள்ளக் குளம், காலக்கட்டளை கிராமத்தில் சாலை அமையவுள்ள பகுதியில் உள்ள  வீடுகளுக்கு இழப்பீடும், மாற்று இடமும்  வழங்காமல் காவல்துறையின் துணை யுடன் வருவாய்துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பலமுறை  அகற்ற  முயன்றனர். இதை மார்க்சிஸ்ட் கட்சி யினர் மற்றும் பொதுமக்கள், விவசாயி கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடு பட்டதால், வீடுகளை அகற்றும் முயற்சியை கைவிட்டனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களாக  வீடுகளை அகற்றும் பணியை முழு மூச்சாக செயல்படுத்த முயன்று, திங்க ளன்று ஏராளமான காவலர்களுடன் அதி காரிகள் வந்தனர். இப்பணிகளை மார்க்சிஸ்ட் கட்சியின் தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமையில், கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தடுத்து நிறுத்தி னர்.  தொடர்ந்து செவ்வாயன்று காலை யிலேயே கோட்டாட்சியர் அர்ச்சனா,  வட்டாட்சியர் மகேஷ், தனி வட்டாட்சி யர் (நெடுஞ்சாலைத் துறை) சாந்தி மற்றும் வருவாய்த் துறையினர், நகாய்  அதிகாரிகள், காவல்துறை அதிகாரி கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரைராஜ், டி.சிம்சன், ஜி.வெண்ணிலா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலைச் செல்வி, காபிரியேல், அமுல்காஸ்ட் ரோ, டி.ஆர்.ராணி, ஒன்றியக்குழு உறுப் பினர்கள், கிளைச் செயலாளர் இளை யராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட சிவசங்கர், ராஜூமோகன், ராஜேந்தி ரன், செடிபவுன், அன்பழகன் ஆகிய குடும் பத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிவ சங்கர், ராஜூமோகன், ராஜேந்திரன், செடிபவுன், அன்பழகன்  ஆகிய 5  குடும்பங்களுக்கு போராட்டக் களத்தி லேயே, உடனடியாக பட்டாக்களை கோட்டாட்சியர் அர்ச்சனா, மார்க்சி ஸ்ட் கட்சி தலைவர்கள் முன்னிலை யில் வழங்கினார். மேலும் இழப்பீடும் வழங்கி மாற்று இடமும், மாற்று இடத்தில் தற்காலிக வீடும் கட்டும் பணியை துவக்கி, பணி முடியும் வரை  அரசு கட்டடம் ஒன்றில் வசித்துக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்தனர். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.