districts

img

ஸ்ரீபொய்சொல்லா மெய்யர் அய்யனார் கோவிலில் அன்னதான கொட்டகை அமைக்க அனுமதி:

பொன்னமராவதி, மார்ச் 12 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே மூலங்குடி கிராமத்தில்  ஸ்ரீ பொய் சொல்லா மெய்யர் அய்யனார்  கோவில் உள்ளது.  அக்கோவிலின் ஏழு சாமி யாடிகளான தேவேந்திரகுல வேளாளர்  (குடும்பன்) இன மக்கள் அன்னதான கூடம் அமைக்க அனுமதி பெற்றுத் தர  வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்று, கடந்த  ஜனவரி 21 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட்டோர் கோவிலை பார்வையிட்டனர்.  அப்போது, கோவிலின் அருகே அன்னதானம் நடத்த மற்ற சமுதாய மக்களுக்கு மண்டபங்கள் உள்ளது போன்று, தேவேந்திரகுல வேளாளர் இன மக்களும் மண்டபம் கட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை அரசுக்கு விடுத்திருந்தார். இதையடுத்து, சிபிஎம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வழிகாட் டுதலுடன் பாரம்பரியமாக தண்ணீர்  பந்தல் வைத்திருந்த இடத்தின் அருகே,  கொட்டகை அமைப்பதற்காக அவ்வி டத்தை சுத்தப்படுத்திய போது, இந்து  சமய அறநிலையத்துறை பொன்னமரா வதி ஆய்வாளர் அதை தடுத்தார். இதை  கண்டித்து அறநிலையத் துறையின் பொன்னமராவதி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப் பட்டது.  அதைத் தொடர்ந்து நடைபெற்ற சமாதான கூட்டத்தில், கொட்டகை அமைத்து அன்னதானம் நடத்திட முடிவு  செய்யப்பட்டது. அதன்படி, கடந்த  சனிக்கிழமை கோவில் விழாவின் போது, மேற்கண்ட சமூகத்தைச் சேர்ந்த  ஏழு சாமியாடிகள் கொட்டகை அமைத்து,  அன்னதானம், தண்ணீர் பந்தல் ஆகிய வற்றை நடத்தினர். கோரிக்கையை வென்றெடுக்க காரணமான சிபிஎம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணிக்கு அம்மக்கள்  நன்றி தெரிவித்தனர். மேலும், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், தீ.ஒ. முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி, ஒன்றியக் குழு உறுப்பினர் சாத்தையா ஆகியோருக்கு பொன் னாடை போர்த்தினர்.