tamilnadu

img

வழக்கறிஞர்கள் பணிகளை புறக்கணிக்கப்போவதாக அறிவிப்பு!

சென்னை,பிப்.22- தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் பணிப் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
வழக்கறிஞர் சட்டத்திருத்த வரைவு மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நீதிமன்ற பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக வழக்கறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நடந்த தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழுவின் பொதுக்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் எடுக்கப்பட்டது