districts

img

உலகத் தாய்ப் பால் வார விழா

பாபநாசம், ஆக. 8-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து உலகத் தாய்ப் பால் வார விழாவை நடத்தின.  பாபநாசம் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில், லயன்ஸ் கிளப் தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்து வரவேற்றார். இதில் மருத்துமனை செவிலியர்கள், லயன்ஸ் கிளப் பொருளாளர் கணேசன், முன்னாள் தலைவர்கள் பாண்டியன், செந்தில், ராஜா முகமது, பிரபாகரன், முன்னாள் செயலர் பன்னீர் செல்வம் உட்பட தாய்மார்கள் பங்கேற்றனர். தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து மாவு, பிஸ்கட், ஆப்பிள் ஆகியவை வழங்கப்பட்டன. செயலாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.