தஞ்சாவூர், ஜன.22 - தஞ்சாவூரில் உள்ள பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.9.9 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வரு கிறது. இது பழமை மாறாமல் புதுப்பிக்கப் பட்டு, அருங்காட்சியகம் அமைக்கும் பணி கள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 110 ஆண்டிற்கு மேலான பழைய மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தினை பழமை மாறாமல் புதுப்பித்து அருங்காட்சியகம் அமைத்திட வும், குழந்தைகளைக் கவர்வதற்காக கண்கவ ரும் அழகிய பூங்கா அமைப்பதற்கும் திட்ட மிடப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள கட்டி டத்தில் 70 எம்.எம் திரையரங்கம் அமைப்பதற் கான பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். ரெடிங்டன் பவுண்டேசன் சார்பில், இணையதள வசதிகளு டன் 20 கணிப்பொறி வசதியுடன், நவீன நடமாடும் பேருந்து நமது மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் சென்று, கொ ரோனா தடுப்பூசி பதிவேற்றும் பணி களை மேற்கொள்ளவுள்ளது. பொது மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவ சம் அணிந்து செல்ல வேண்டும். முகக் கவசம் அணியாமல் செல்ப வர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வரு கிறது. நமது மாவட்டத்தில் 3000-க்கும் மேற் பட்ட படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாத வாறு பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் உற் பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப் பட்டு வரும் அனைத்து தடுப்பு நடவடிக்கைக ளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைக்க வேண்டும்” என்றார். பின்னர், மாவட்ட ஆட்சியர் பாபநாசம் வட்டம், கணபதி அக்ரஹாரம் பகுதியில், பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யினை ஏற்று, நவீன முறையில் பல்நோக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கால்நடை மருந்தகம் அமைய உள்ள இடத்தினை ஆய்வு செய்தார்.