தஞ்சாவூர், ஆக.2 - வட்டியில்லா கடன், தவணை தவறிய வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை வந்திருந்த தமிழ்நாடு அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை அரசு செயலாளர் ஜெ. ராதா கிருஷ்ணனிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டில் போதுமான தண்ணீர் கிடைக்காததால் ஜூன் 12-இல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு, அக்டோ பர் 10 ஆம் தேதியே மூடப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி இலக்கை தாண்டி செய்யப் பட்டது. தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகி பெரிய மகசூல் இழப்பு ஏற்பட்டது. சம்பா சாகுபடியும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு விவசாயி களிடம் இருந்தது. ஆனால் நடைபெற வில்லை. எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு கடன் சுமையை குறைத்திடும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள வட்டி யில்லா கடன்களை, தவணை தவறியதற் கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், சாகுபடி சான்று கொடுத்தால் மட்டுமே கடன் தரப்படும் என்ற அறிவிப்பு கூட்டுறவுத் துறையில் இருந்து வந்துள்ளது. குத்தகை சாகுபடி மற்றும் கோவில் மடம், அறக்கட்டளை நிலங்களில் பயிர் செய் யும் விவசாயிகளுக்கு இது பெரும் இடையூ றாக உள்ளது. எனவே, கடன் வழங்கும் விதி முறைகளை எளிமையாக்கிட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில், சில தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களில் உர விற்பனைத் தொகை செலுத்தாததால், உர நிறுவனம் கடன் சங்கத்திற்கு உரம் அனுப்பா மல், விவசாயிகள் வேறு கடன் சங்கத்தில் உரம் பெறும் நிலை உள்ளது. அனைத்து கடன் சங்கத்திலும் உர விற்பனை நடத்தி, அந்தந்த கிராமங்களிலேயே உரம் கிடைப்ப தற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.