திருவாரூர், ஜூலை 29 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சமூக நலன் மற்றும் மகளிர் உரி மைத் துறையின் சார்பில் 2024-2025 ஆம் கல்வி யாண்டு விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். திங்களன்று நடந்த இந்நிகழ்ச்சியில் அம்மையப்பன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 158 மாணவர் கள், 143 மாணவிகள் என மொத்தம் 301 மாணவ-மாணவி களுக்கு விலையில்லா சீருடைகள் வழங்கப்பட்டன.