districts

img

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் வாலிபர் சங்க மாநகர் மாவட்ட மாநாடு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஆக.10 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட 17-வது  மாநாடு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை  அரியமங்கலத்தில் நடைபெற்றது. மாநாட்டின் முதல் நாள் நடைபெற்ற  இளைஞர் எழுச்சி பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்ட  தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். அரியமங்கலம் பெட்ரோல் பங்க் அரு கில் இருந்து தொடங்கிய பேரணி அம்மா குளம், நேருஜி நகர், எஸ்ஐடி வழியாக  பொதுக்கூட்ட திடலை வந்தடைந்தது.  பொதுக்கூட்டத்தில் வரவேற்பு குழு  தலைவர் கனல்கண்ணன் வரவேற்றார்.  முன்னாள் மாநில துணைச் செயலாளர் ஜெயசீலன், மாநில இணைச் செயலா ளர் பாலசந்திரபோஸ், மாவட்டச் செய லாளர் லெனின் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  இரண்டாம் நாள் நடைபெற்ற மாநாட்டை, முன்னாள் மாநகர் மாவட்டத்  தலைவர் சந்திரபிரகாஷ் துவக்கி வைத்தார். மாநாட்டு கொடியை மாவட்ட துணைத்தலைவர் பாரதி.சீனிவா சன் ஏற்றி வைத்தார். அஞ்சலி தீர்மா னத்தை மாவட்ட துணைச் செயலாளர் இரட்டைமலை வாசித்தார். மாநிலத்  தலைவர் ரெஜிஸ்குமார் துவக்க உரை யாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் லெனின் வாசித் தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ஜெய்குமார் சமர்ப்பித்தார். மாதர் சங்க மாவட்ட தலைவர் ரேணுகா, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  திருச்சி மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.  பாதாள சாக்கடை இல்லாத பகுதிக ளுக்கு பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பால் பண்ணை  முதல் துவாக்குடி வரையிலான சர்வீஸ்  சாலையை உடனே அமைக்க வேண்டும்.  தெரு நாய்கள், பன்றிகள், மாடுகள், சாலைகளில் சுற்றி வருவதால் பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இவற்றின் பெருக்கத்தை கட்டுப் படுத்த வேண்டும்.  மாநகரில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனையாவதை தடுக்க வேண்டும். போதை பழக்கத் திற்கு ஆளான இளைஞர்களை, மாண வர்களை மீட்டிட விழிப்புணர்வு பிரச்சா ரமும் மறுவாழ்வு மையமும், மருத்துவ  உதவியும் செய்திட தன்னார்வலர்கள், இளைஞர் அமைப்புகளை இணைத்து அரசு சார்பில் குழுக்களை அமைக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கபடி போட்டி நடத்திட தடை விதிக்கப் பட்டு உயர் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்ய வேண்டும். அரியமங்கலத்தில், ரயில்வே தண்ட வாளத்தை பொதுமக்கள் கடக்க சுரங்கப்பாதை அமைத்து கொடுத்து, அரியமங்கலம் ரயில் நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாநகர் மாவட்ட தலைவராக பா. லெனின், மாவட்டச் செயலாளராக ஆர்.சேதுபதி, மாவட்டப் பொருளாளராக ஆர். நவநீதகிருஷ்ணன் உள்பட 25 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில இணைச் செய லாளர் பாலசந்திரபோஸ் நிறைவுரை யாற்றினார். வரவேற்புகுழு பொருளா ளர் யுவராஜ் நன்றி கூறினார்.

;