districts

img

விளையாட்டு மைதானங்களை தனியாருக்கு விடாதே! வாலிபர் சங்க தென்சென்னை மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக. 16 - விளையாட்டு மைதா னம், பூங்கா, உடற்பயிற்சி கூடங்களின் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாடு வலி யுறுத்தி உள்ளது. சங்கத்தின் 18வது மாவட்ட மாநாடு ஞாயிறன்று (ஆக.14) எம்ஜிஆர் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகளை கட்டணமின்றி வழங்க வேண்டும்,  சென் னையில் நிலவும் போதை  கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை  நிறைவேற்றி, மாநகராட்சி யின் அனைத்து மண்ட லங்களிலும் செயல்படுத்த வேண்டும். அரசு மற்றும் கோவில் நிலங்கள், பயன்பாடற்ற நீர்வழிக்கரையோரம் வசிக்கும் மக்களை வெளி யேற்றக் கூடாது. அவரவர் வசிக்கும் பகுதியிலேயே அடுக்குமாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு பயனாளிகளிடம் பங்களிப்பு தொகை வசூலிக்க கூடாது,  குரோம்பேட்டை மருத்துவ மனையை பன்னோக்கு மருத்துமனையாக தரம் உயர்த்த வேண்டும், பேருந்து நிறுத்தங்களில் கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினார். விருகை பகுதிச் செயலா ளர் ஏ.மணிமாறன் வரவேற் றார். செயற்குழு உறுப்பி னர் பி.சுசீந்திரா சங்க கொடியை ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை செயற்குழு உறுப்பினர் கே.சிவக்குமார் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் வி.ஏழுமலை துவக்க வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு வேலை அறிக்கை யும், பொருளாளர் எஸ்.திவாகர் வரவு செலவு அறிக் கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர்கள் ம.சித்ரகலா (மாதர் சங்கம்), ரா.பாரதி (மாணவர்சங்கம்), ஜி.வெல்கின் (யுனைட்) ஆகியோர் வாழ்த்தி பேசி னர். மாநில இணைச் செயலா ளர் ஏ.வி.சிங்காரவேலன் நிறைவுரையாற்றினார். மாவட்டக்குழுவின் தலைவராக எம்.ஆர்.சுரேஷ்,  செயலாளராக தீ.சந்துரு, பொருளாளராக எஸ்.திவாகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;