districts

img

சுரங்கத்தில் இருந்து சிமெண்ட் ஆலைக்குச் செல்ல தனி சாலை அமைக்க வேண்டும் வாலிபர் சங்க அரியலூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

அரியலூர், ஆக.20 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட 4-வது மாநாடு ஆண்டி மடத்தில் நடைபெற்றது. முன்னதாக டாக்டர்  அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணி வித்து சமுதாயக் கூடம் வரை பேரணியாக வந்து மாநாட்டு கொடியேற்றப்பட்டது. மாவட்டத் தலைவர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். ஆண்டிமடம் ஒன்றியச்  செயலாளர் அருணாச்சலம் வரவேற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற் குழு உறுப்பினர் கிருஷ்ணன் பேசினார். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் அம்பிகா  வாழ்த்தி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏழுமலை புதிய மாவட்டக்  குழுவை அறிமுகம் செய்து நிறைவுரை யாற்றினார்.  மாவட்டத் தலைவராக ரவீந்திரன், செய லாளராக துரை.அருணன், பொருளாளராக அருண்பாண்டியன், மாவட்ட துணைத் தலைவராக புவனேஸ்வரி, மாவட்ட துணைச்  செயலாளராக அருணாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக லோகேஷ், குணா உட்பட 16 பேர் கொண்ட புதிய மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் படித்த இளை ஞர்களுக்கு தனியார் சிமெண்ட் ஆலை களின் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். செந்துறை, ஆண்டிமடத் தில் அரசு முந்திரி தொழிற்சாலை அமைக்க  வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்கக் கூடாது. ஆண்டி மடம், தா.பழூர் பகுதியில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும். சிமெண்ட், சுண்ணாம்புக் கல் லாரிகளால் ஏற்படும் தொடர் விபத்தை  தடுத்திட வேண்டும். சுரங்கத்தில் இருந்து  சிமெண்ட் ஆலைக்குச் செல்ல தனியாக  சாலை அமைக்க வேண்டும். ஜெயங்கொண் டம் தலைமை மருத்துவமனையின் தரத்தை  உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

;