சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா சிலை அருகே உள்ள ஆட்டோ சங்க சிஐடியு கிளை சார்பாக ஆண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட பொதுச் செயலாளர் விஜயகுமார், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் முனியராஜ், வி.ச. ஒன்றிய பொருளாளர் காசிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.