districts

img

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை: காவல்துறை பிரச்சாரம்

மன்னார்குடி, டிச.24 -  பெண்கள், வளர் இளம் பெண்கள் மற்றும்  சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறை கள் மற்றும் உளவியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு  எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மன்னார்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சி.அன்னை அபிராமி மற்றும் தலைமை காவலர் தமிழ்கொடி  மற்றும் நகர காவல் நிலைய துணை ஆய்வாளர் ஆர்.விஜயராணி சார்பில் மன்னார்குடி தூயவள னார் மேல்நிலைப் பள்ளி, மேலவீதி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டன. தூய வளவனார் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மன்னார்குடி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சி. அன்னை அபிராமி பேசுகையில், போக்சோ சட்டத்தை குறித்தும், அறிவியல் அதிகளவில் வளர்ந்துள்ள நிலையில் இளம்பெண்கள், மாண விகள் கைப்பேசி பயன்படுத்தும்போது கவனிக்க  வேண்டிய எச்சரிக்கை பற்றியும், தாங்கள் சந்திக்கும் எந்த பிரச்சனைகளையும் அச்சமின்றி  ஆசிரியைகள், பெற்றோர்கள் மற்றும் சில அவசர  சமயங்களில் காவல்துறையினரிடம் தகவல் தெரி விக்க வேண்டும்.  மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உதவி எண் 181, பள்ளி மாணவ-மாணவியர் புகார்  அளிக்க வேண்டிய உதவி எண்.14417, தற் கொலை எண்ணம் தடுப்பு தொலைபேசி ஆதரவு ஆலோசனை உதவி எண் 104 மற்றும் மாணவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க  உதவி எண்.1098. இந்த எண்களை எந்தந்த சம யங்களில் எந்த முறைகளில் பயன்படுத்த வேண் டும் என்பதையும் விளக்கி உரையாற்றினார். நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் துண்டு  பிரசுரங்கள் மாணவிகள் மத்தியில் விநியோகிப் கப்பட்டன. மன்னார்குடி மேலவீதியில் பல இடங்க ளில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பிரச்சாரத்தில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்.விஜய ராணி விழிப்புணர்வு உரையாற்றினார்.