districts

திருச்சி முக்கிய செய்திகள்

புகைப்பட கலைஞர்களுக்கான மருத்துவ முகாம்

 அறந்தாங்கி, டிச.28 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அறந்தாங்கி  மண்டல புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப் பதிவாளர்கள்  நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  சங்கத்தின் துணைச் செயலாளர் சுதாகர் வரவேற்றார். சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் வினோத் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும், சங்கத்தின் வரவு செலவுகளை பொரு ளாளர் வேலவேந்தனும் சமர்ப்பித்தனர். தொடர்ந்து அறந்தாங்கி மண்டல புகைப்பட கலைஞர்கள்  மற்றும் ஒளிப் பதிவாளர்கள் நலச் சங்கமும், அறந்தாங்கி ஸ்ரீ வளர்மதி கல்லூரி நிறுவனமும் இணைந்து மருத்துவ முகாமை நடத்தினர். மருத்துவ முகாமினை சங்கத்தின் கௌர வத் தலைவர் அரவிந்தன் துவக்கி வைத்தார். சங்க உறுப்பி னர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. 

அறிவியல் இயக்க  ஒன்றிய நிர்வாகிகள் தேர்வு

திருவாரூர், டிச.28 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின், திருவாரூர் மாவட்டம்  குடவாசல் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் சரபோஜிராஜபுரம் ஊராட்சி கடகம்பாடியில் நடைபெற்றது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குடவாசல் ஒன்றிய துணைத் தலைவர் கஞ்சமலை தலைமை வகித்தார். திருவா ரூர் ஒன்றியத் தலைவர் சௌ.சுரேஷ் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் கோ.பிளாட்டோ வாழ்த்திப் பேசினார். மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன் கருத்துரை ஆற்றி னார். குடவாசல் ஒன்றியத்தில் 2024 இல் நடைபெற்ற சமத்துவ பொங்கல், குடியரசு தின நிகழ்ச்சி, தொலைநோக்கி மூலம் இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு வான்நோக்கு நிகழ்வு, வடுகக்குடி ஊராட்சியில் செம்போன் சேர்பாக்கம் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின சகோதரத்துவ பேரணி,  துளிர் வினாடி-வினா போட்டிகள், டிச.24 அன்று நடைபெற்ற  கிராம அறிவியல் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை நினைவு  கூர்ந்தார். திருவாரூர் மாவட்டத் தலைவர் சங்கரலிங்கம், புதிய  ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றி னார். குடவாசல் ஒன்றியத் தலைவராக மருத்துவர் மருத வாணன், செயலாளராக கஞ்சமலை, பொருளாளராக பிரபா கரன் உட்பட 9 பேர் கொண்ட நிர்வாக குழுவும், 21 பேர்  கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 2025 ஆம் ஆண்டு செயல்பாடுகள், மாணவர்களுக் கான போட்டிகள் நடத்துவது குறித்தும் மாநில அளவிலான நிகழ்ச்சியை குடவாசல் ஒன்றியத்தில் நடத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் தரமற்ற விதைகளை நிரந்தரமாக  தடை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூர், டிச.28 - விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய அம்மன், பொன்னி உள்ளிட்ட தரமற்ற விதைகளை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், “தனியார் வேளாண் இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். சாலைகளில் சுற்றித் திரியும் வெறிநாய்களால் கால்நடைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாய நிலங்களில் வன விலங்குகளால் ஏற்படும் சேதத்துக்கு வனத் துறையில் இழப்பீடு பெற விண்ணப்பிப்பது குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம், பருத்தி, நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மானிய திட்டங்களில், பெரும்பாலான விவசாயிகளும் பயன்பெறும் வகையில் நிதி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். நடமாடும் விதை வங்கி நடப்பாண்டு, நெற்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய அம்மன் பொன்னி உள்ளிட்ட தரமற்ற, மண்ணுக்கு ஒத்துவராத விதைகளை தடை செய்ய வேண்டும். நெற்பயிர் நடவு காலத்தில், நடமாடும் விதை வங்கி கிராம விவசாயிகளை நோக்கி வரும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான உயிர் உரங்கள் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு கிராம விவசாயிகளிடமும் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வண்டல் மண் எடுக்க கிராம அளவில் வண்டல் மண் முகாம் நடத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க பெருந்திட்டம் வகுக்க வேண்டும். வெட்டி முடிக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் சுரங்கங்களில், மருதையாறு, வெள்ளாற்று, வெள்ள நீரை நிரப்பி நீர்த்தேக்கங்களாகவும், 33 சதவீதம் காடுகளாகவும் மாற்றிட சிமெண்ட் ஆலை நிர்வாகங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பெரியதிருகோணம் கிராமத்தில் டால்மியா சிமெண்ட் ஆலை சுரங்கம் தோண்டப்பட்டதால், அண்மையில் பெய்த மழையால் சுரங்க நீர் மற்றும் மருதையாற்று நீர் புகுந்து 50 ஏக்கர் அளவில் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை முற்றிலும் அழிந்துவிட்டது. எனவே அந்த சிமெண்ட் ஆலை நிர்வாகம் மூலம் அதிக இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பொன்னாறு தலைப்பில் நிரந்தரமாக தடுப்புச் சுவர் அமைத்து, தா.பழூர் பகுதியிலுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் தண்ணீரை அதிகளவில் திறந்து விட வேண்டும். ஒரே ஊராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஊராட்சி செயலர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். வேளாண் இணை இயக்குநர் கீதா, கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளர் தீபாசங்கரி மற்றும் துறை அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை சரகத்தில் கைப்பற்றப்பட்ட  589 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

தஞ்சாவூர், டிச.28-  தஞ்சாவூர் காவல் சரகத்தில் கைப்பற்றப்பட்ட 589 கிலோ  கஞ்சா செங்கிப்பட்டி அருகே உள்ள அயோத்திப்பட்டி யில் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் சரகத்தில், போதைப் பொருட்களுக்கு எதிராக  நடத்தப்பட்ட சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மொத்தம் 589 கிலோ கஞ்சா சிக்கியது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட கஞ்சா வானது, நீதிமன்ற உத்தரவின்படி வெள்ளிக்கிழமை தீயிட்டு  அழிக்கப்பட்டது.  இதற்காக தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே,  அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் அழிக்கும் கூடத்துக்கு தஞ்சாவூரில் 536 கிலோ, மயிலாடு துறையில் 9 கிலோ, நாகப்பட்டினத்தில் 11 கிலோ, திருவா ரூரில் 33 கிலோ என அந்தந்த மாவட்டங்களில் கைப்பற்றப் பட்ட மொத்தம் 589 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கொண்டு வந்தனர். தொடர்ந்து தஞ்சாவூர் சரக டிஐஜி ஜியா உல்ஹக், அழிக்கப்பட உள்ள கஞ்சா மூட்டைகளை பார்வையிட்டு, அந்த மாவட்ட காவல்துறையினரிடம் விவரங்களைக் கேட்ட றிந்தார். பின்னர் கஞ்சாவை அழிக்கும் பணியை டிஐஜி  கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், அதற்கான நவீன இயந்திரத்தில் கஞ்சா பண்டல்களும், மூட்டைகளும் போடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.  இப்பணியில், ஒரத்தநாடு ஏஎஸ்பி ஷஹ்னாஸ் இலியாஸ்,  ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பிக்கள் வல்லம் திவ்யா, திருவை யாறு அருள்மொழி அரசு, மயிலாடுதுறை ராஜேந்திரன் மற்றும்  காவல்துறையினர் பங்கெடுத்தனர்.

குரூப்-4 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி

புதுக்கோட்டை, டிச.28 - குரூப்-4 போட்டித் தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.  இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2025  ஆம் ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிரலில் தொகுதி-4 போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தொகுதி-4 தேர்விற்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி  வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புதுக்கோட்டை ஐ.டி.ஐ வளாகத்தல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு டிச.30  அன்று காலை 10.30 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. பயிற்சியின் போது கட்டணமில்லா பாடக் குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இந்த கட்ட ணமில்லா பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள்  பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல்  ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் திற்கு நேரடியாக வர வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து விதமான  போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பாடக்குறிப்பு கள் மற்றும் இணைய வழி மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம அறிவியல் திருவிழா

திருவாரூர், டிச.28 - திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், சார நத்தம் ஊராட்சியில் வேடம்பூரில் வானவில் மன்றம் சார்பாக கிராம அறிவியல் திருவிழாவில் பாடல், விளை யாட்டு, மந்திரமா தந்திரமா? உள்ளிட்ட அறிவியல் நிகழ்ச்சி கள் நடைபெற்றன. வானவில் மன்ற கருத்தாளர்கள் பி.விஜய், ஆர்.சதீஷ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தி னர். இல்லம் தேடி தன்னார்வலர் கே.அன்பரசி மற்றும் வேடம்பூர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வீடுகளில் உள்ள மரக் கழிவுகளை சாலையில் போடக் கூடாது! கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு 

கும்பகோணம், டிச.28 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பொதுமக்கள், வீடுகளில் உள்ள மரக்கழிவுகளை சாலையில் போடக் கூடாது எனவும் அதற்காக ஏற்பாடு  செய்யப்பட்டுள்ள மர அரவை இயந்திரத்தை பயன் படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆணையர் வெளியிட்டுள்ள அறி விப்பில், “கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48  வார்டுகளில் உள்ள தெருக்கள், சாலைகளில் ஏராளமான  மரங்கள் உள்ளன. இதில் தாழ்வாக உள்ள மரங்கள், வீட்டில் உள்ள மரங்கள், வெட்டப்பட்ட மரக் கழிவுகள் மற்றும் தோட்டக் கழிவுகள் தெருக்களில் உள்ள சாலை களில் போடப்படுகின்றன. இதனால் போக்குவரத்திற்கும். பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. மேற்படி மரக்கழிவுகளுக்கு முழு மையாக தீர்வு காணும் வகையில் மாநகராட்சிக்கு மரங்கள்  அரைத்து தூளாக்கும் 4 இயந்திரம் வாங்கப்பட்டு இயக்கப்படுகிறது. தற்போது நகரின் விரிவாக்கப் பகுதிகளில் போடப் பட்டுள்ள மரக்கழிவுகள் அரைக்கப்பட்டு தூளாக்கும் பணி  நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை மண்டலம்-2, வார்டு  எண் 21-ல் உள்ள ஸ்ரீநகர் காலனியில் தேங்கியுள்ள அனைத்து மரக்கழிவுகளும் அரைத்து தூளாக்கப்பட்டது. தொடர்ந்து நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இப்பணி நடைபெறும்.  பொது மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள மரக்கழிவு கள் மற்றும் தோட்டக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணி  நடைபெறுவதற்கு முன்னரே மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மரக்கழிவுகளை சாலைகளில், தெருக்களில் போடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மீறினால், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 இன்படி அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதக் கட்டணம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சியின் அனைத்து பகுதியையும் தூய்மையாக பராமரித்திட ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது” என  தெரிவித்துள்ளார்.

கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்த வேண்டும்

மயிலாடுதுறை ஆட்சியர் அறிவுறுத்தல் மயிலாடுதுறை, டிச.28 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாது காப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “குழந்தை கள் பாதுகாப்பு குறித்த விழிப்பு ணர்வை அனைத்து பொது மக்க ளுக்கும் சென்றடையும் வகையில் நடத்த வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் பொருட்டு, கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.  வட்டார அளவில் குழந்தை கள் பாதுகாப்பு குழு, பேரூராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு, நகராட்சி அளவில் குழந் தைகள் பாதுகாப்பு குழு. உருவாக் கப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்டத் தினை கூட்டி குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விவாதித்து அதன் தீர்மான நகலினை மாவட்ட ஆட்சியருக்கு  அனுப்ப வேண்டும். 18 வயதுக்குட்பட்ட குழந்தை களுக்கு திருமணம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். அதனை முன்கூட்டியே கண்ட றிந்து தடுத்து நிறுத்திட நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். திருமண மண்டபம்  மற்றும் கோயில்களில் திருமணம்  செய்யும்போதும் வயது சான்று  பெற வேண்டும். 18 வயதிற்கு  உட்பட்டவர்கள் திருமணம் செய்யட முற்படும்போது மாவட்ட  நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும். வளரிளம் பருவ கருத்தறித்தல் மற்றும் அதன் பாதிப்புகள் பற்றிய  விழிப்புணர்வு குழந்தை களிடையே சென்றடையும் வகை யில் நடத்தப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குழந்தை கள் சேவை எண்-1098 குறித்த விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துக! அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.28 - புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். கடந்த ஊதிய மாற்றத்தின் போது வழங்கப்படாத 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முனைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் நவநீதன் உள்ளிட்ட பலர் பேசினர்.  அரியலூர் அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத் துக்கு நெடுஞ்சாலைத் துறை பணியாளர் சங்க அரிய லூர் வட்டச் செயலர் அம்பேத்கர் தலைமை வகித்தார். பொருளாளர் சண்முகமூர்த்தி, சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலர் சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். கும்பகோணம் கும்பகோணத்தில் ஒன்றிய அலுவலகம், மாநக ராட்சி அலுவலகம், இந்துசமய அறநிலையத் துறை அலுவலகம் உள்ளிட்ட 10 இடங்களில் நடைபெற்றது. கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வட்டக் கிளைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். வருவாய் துறை ஊழியர் சங்க பொறுப்பாளர் அலெக்ஸ் பாண்டியன், முதுநிலை வருவாய் கோட்டாட்சியர் தேவசேனா, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்  சார்பாக பக்கிரிசாமி, திருவிடைமருதூர் பன்னீர் செல்வம், திருவிடைமருதூர் வட்டத் தலைவர் கண்ணன்  ஆகியோர் உரையாற்றினர்.