districts

img

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் தீபாவளி பட்டாசு விற்பனை

பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் தீபாவளி பட்டாசு விற்பனை தொடக்க விழா நவம்பர் 9 அன்று ஆவின் எதிரில் நடைபெற்றது. இணைப்பதிவாளர் க.பாண்டியன் தலைமை வகித்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பட்டாசு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் பிரபு, பொது நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாளர் பூங்குழலி உள்பட பலர்  கலந்து கொண்டனர்.