திருச்சிராப்பள்ளி, மே 9 - பொதுமக்கள் பயன்படுத்திய பாதையை அடைத்து, பொன்மலை ரயில்வே நிர்வாகம் அராஜகம் செய் வதற்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதி செய லாளர் டி.விஜயேந்திரன் விடுத்துள்ள செய்தி வருமாறு:
திருச்சி மாவட்டம் பொன்மலை பகுதி என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகும். இங்கு மாரி யம்மன் கோவில், கிறிஸ்தவ தேவா லயம், பள்ளிவாசல் ஆகியவை ஒன்றாக இருப்பது மிகச் சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.
இங்குள்ள ஒன்றிய அரசின் ரயில்வே தொழிற்சாலையில் கடந்த 100 ஆண்டுகளாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணிமனையில் 12,000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணி புரிந்து வந்தனர். தற்போது 6000-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களுடைய குடியிருப்பு பகுதி, பொன்மலையை சுற்றியுள்ள மேல கல்கண்டார்கோட்டை, கீழ கல்கண்டார் கோட்டை, பொன்மலைப் பட்டி, பொன்னேரிபுரம், கொட்டப் பட்டு, மாஜி ராணுவ காலனி, விவே கானந்தர் நகர், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ளது. ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான தொழி லாளிகளும், தொழிலாளிகளின் குடும்பத்தாரும், இந்தப் பகுதி யிலேயே வசித்துவருகின்றனர்.
முன்னறிவிப்பின்றி மூடல்
இவர்கள் தினந்தோறும் பயன் படுத்தக் கூடிய ரயில்வே காலனி பகுதியின் பிரதான சாலையை, ரயில்வே நிர்வாகம் எந்தவித முன்ன றிவிப்பும் இன்றி மூடியிருக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து கேட்ட போது, “இங்கு ரயில்வே எலக்ட்ரி க்கல் மெமோ ஒர்க்ஷாப் வர இருக் கிறது. அதனால் தற்பொழுது பணி துவங்கப்பட்டு தீவிரமாக பணி யாற்றி வருகிறோம்” என்றனர்.
ஆனால் இந்த பிரதான சாலை என்பது ரயில்வே தொழிலாளிகள் தினந்தோறும் பணிமனைக்கு சென்று வரக்கூடிய சாலை. மேலும் ஓய்வு பெற்ற ரயில்வே தொழிலாளி களும், அவர்களுடைய குடும்பங் களும், பொன்மலை கோட்ட மருத்துவமனைக்கு சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வரு கின்றனர். ரயில்வே தொழி லாளிகளின் குழந்தைகள் படிப்பு என்பது, பொன்மலை பட்டியை சார்ந்தே உள்ளது.
3 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலை
இவர்கள் பயன்படுத்தி வந்த பாதையை அடைத்த தால், குழந்தைகள் 3 கிலோ மீட்டர் சுற்றி பள்ளிக்குச் செல்ல வேண்டும். இதனால் ரயில்வே தொழி லாளர்கள், அவர்களின் குடும்பங் கள், ஓய்வுபெற்ற ரயில்வே தொழி லாளர்கள் மற்றும் குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகளுடைய படிப்பும் மிகப்பெரிய கேள்விக் குறியாக உள்ளது.
அதுமட்டுமல்ல, பொன்மலை யை சுற்றி இருக்கக் கூடிய ஏராள மான கிராமங்களில் உள்ள பொது மக்கள் இந்த பிரதான சாலையை பயன்படுத்தி வந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முறைசாரா தொழில் செய்யக்கூடியவர்கள். இவர்களுடைய வாழ்வாதாரம், பொன்மலை பகுதியைத் தாண்டி சென்று, தங்களுடைய பணிகளை செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது.
கண்டன இயக்கம்
இப்படி பொதுமக்களுடைய பயன் பாட்டில் பல ஆண்டு காலமாக இருந்து வந்த பாதையை அடைத்த ரயில்வே நிர்வாகத்தின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக் க்கிறோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களை அழைத்துக் கொண்டு, டி.ஆர்.எம்.ஐ சந்தித்து, “நாங்கள் பயன்படுத்தி வந்த பகுதியில் மீண்டும் பாதை வேண்டும்” என கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதன்பிறகும் எவ்விதமான நடவடிக்கையும் இல்லை.
மீண்டும் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் கட்சியின் சார் பாக பொதுமக்களை திரட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை ரயில்வே நிர்வா கம் அந்த பகுதியில் பொது மக்களுக்கான பாதையை திறப்ப தற்கான எவ்வித அறிகுறியும் இல்லை.
ஒன்றிய அரசு தொடர்ச்சியாக இப்படி கார்ப்பரேட்களுடன் கைகோர்த்துக் கொண்டு, பொது மக்கள் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பல்வேறு இடங்களை தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு, இப்படி மக்களை அலைக்கழிப்பது நியாயம் தானா?
எனவே உடனடியாக ரயில்வே நிர்வாகம் அந்தப் பகுதியில் என்ன செய்யப் போகிறார்கள் என்று அறி விப்பு பலகை வைக்க வேண்டும். பொது மக்களுக்கான பாதையை உத்தரவாதம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.