பாபநாசம், டிச.14 - குப்பைமேடு கிராம விவசாயத் தொழிலா ளர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் குப்பை மேடு கிராமத்தில் வசிக்கும் நிலமற்ற விவசா யத் தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும். சமுதாயக் கூடம் கட்ட உரிய பரப்பிற்கான அனுமதியை பாபநாசம் பேரூராட்சி செயலர் அலுவலர் வழங்க வேண்டும். பழைய பேருந்து நிலை யத்தில் கழிவறை கட்டித் தர வேண்டும். குப்பைமேடு பகுதியில் அங்கன்வாடி மையம் கட்டித் தர வேண்டும். பாபநாசம் பேரூராட்சி அனைத்து வார்டு களிலும் முறையாக கொசு மருந்து அடிக்க வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாபநாசம் தாலுகா அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டக் குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியச் செயலர் முரளிதரன் உட்பட பலர் பங்கேற்றனர்.