பெரம்பலூர், ஏப்.10 - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே உள்ள லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னதாக மாவட்டச் செயலாளர் ஆ.இராமர் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை குறித்து விளக்க உரை ஆற்றி னார். மாநில துணைத்தலைவர் ஸ்டீபன் நாதன் தேர்தல் அறிக்கை வெளியிட, அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பெரம்பலூர் மாவட்ட மூத்த தலைவர் என்.செல்லதுரை பெற்றுக் கொண்டார். அறிவியல் மனப்பான்மை, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச் சூழல், விவசாயம் குறித்த வாழ்வாதார உரி மைகள் அடங்கிய முக்கிய அம்சங்கள் குறித்த கோரிக்கைகளை, தமிழ்நாடு அறி வியல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி களின் வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டுள்ளது. அறிவியல் இயக்க நிர்வாகிகள் மற்றும் வானவில் மன்ற செயல்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரம்யா நன்றி கூறினார்.