districts

திருச்சி முக்கிய செய்திகள்

ரூ.1.62 கோடி வாடகை பாக்கி
சத்திரம் பேருந்து நிலையத்தில் 
20 கடைகள் மூடல்: 
ஆக்கிரமிப்பு அகற்றம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்குள் சுமார் 35-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த 18  மாதங்களாக சுமார் ஒரு கோடியே 62 லட்சத்திற்கும் மேல்  ஒரு சில கடைகளில் வாடகை பாக்கி மட்டும் உள்ளது. 

இந்த வாடகை பாக்கி தராத கடைகளை பூட்டவும்,  பேருந்து நிலையத்திற்குள் உள்ள  ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன் பேரில் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் தலை மையில், கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி தலை மையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், உதவி செயற்பொ றியாளர் கிருஷ்ணமூர்த்தி, இளநிலை பொறியாளர்கள் மதன் குமார், ராஜேந்திரன், கணேஷ்பாபு மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட வருவாய் உதவி ஆய்வாளர் குமரேஷ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் ஈடுபட்ட னர். அப்போது வாடகை பாக்கி செலுத்தாத 20 கடை களை அதிகாரிகள் பூட்டினர். மேலும் பேருந்து நிலையத்தில்  ஆக்கிரமிப்பு கடைகள் முன்பு இருந்த அனைத்து ஆக்கிர மிப்புகளையும் அதிரடியாக அகற்றினர்.

வருமான வரி செலுத்துவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கும்பகோணம், ஜூன் 15- வருமான வரி செலுத்துபவர்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வருமான  வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருமான வரித்துறை உதவி ஆணையர் குமுதா தலைமை  வகித்தார். 

நிகழ்ச்சியில் வருமான வரித்துறை அலுவலர் பழனிச் சாமி பேசுகையில், “வருமான வரி செலுத்துபவர்கள் தங்க ளது வரி விவரங்களை வருமான வரித்துறைக்கு தெரி வித்து முன்கூட்டியே வரியை செலுத்த வேண்டும். தங்க ளது வருமானத்தின் உண்மைத்தன்மை மற்றும் வருமானம்  தொடர்பான அனைத்து விவரங்களையும் வருமான வரித் துறைக்கு உண்மையாக தெரிவிப்பது, கணக்குகளை தாக்கல் செய்வது அவசியமான ஒன்றாகும். 

இதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் வர வேண்டியது அவசியம். வருமான வரியை முழுமை யாக செலுத்துவதால் பல்வேறு பயன்கள் நமக்கு கிடைக் கின்றன” என்றார்.

கும்பகோணம் பிரிவு நிர்வாக அலுவலர் பத்மநாபன்,  வர்த்தக சபை உறுப்பினர்கள், பட்டயக் கணக்காளர்கள் கலந்து கொண்டனர். 

ரசாயன உரங்களை குறைத்து பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

தஞ்சாவூர், ஜூன் 15-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின்கீழ் உள்மாவட்ட அளவிலான விவசாயி கள் பயிற்சியில், ரசாயன உரங்களை குறைத்து பயன் படுத்துவதன் நன்மைகள் குறித்து செங்கமங்கலம் கிராம  விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 

இதில் வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) எஸ். ராணி தலைமை வகித்து பேசுகையில், “ரசாயன உரங்களை  குறைத்து இயற்கை உரங்களான பசுந்தாள் உரங்கள்,  மக்கிய எரு, அசோலா, உயிர் உரங்கள் போன்றவை களைப் பயன்படுத்தலாம். உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, திரவ ரைசோபியம் மற்றும் பசுந்தாள் உரங்களான சணப்பு, தக்கைப்பூண்டு ஆகியவற்றை மானிய விலையில் வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருந்து பெற்று விவசாயத்திற்கு பயன்படுத்தலாம்” என்றார். 

ஓய்வுபெற்ற உழவியல் துணை பேராசிரியர் ராமசாமி,  பயிர் சுழற்சி முறை குறித்தும், மண் வளம் காக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். 

வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வர வேற்றார். வேளாண்மை உதவி அலுவலர் கே.கோகிலா  நன்றி கூறினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயி களுக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. 

இளைஞரிடம் இணையவழியில் ரூ.24.60 லட்சம் மோசடி

தஞ்சாவூர், ஜூன் 15- கும்பகோணத்தில் இளைஞரிடம் இணைய வழியில்  ரூ.24.60 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரைச் சேர்ந்த 32 வயது இளைஞரின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு, ஏப்ரல் மாதம் வந்த தகவலில் இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் நிறைய லாபம் கிடைக் கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதை நம்பிய இளைஞர் எதிர் முனையில் பேசிய மர்ம  நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில்  ரூ.24.60 லட்சம் அனுப்பினார். ஆனால், இளைஞருக்கு பணம் பறிபோனதே தவிர, எந்தவிதத் தொகையும் கிடைக்கவில்லை. இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் குற்றக்  காவல் பிரிவில் இளைஞர் புகார் செய்ததன் பேரில், காவல்  துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை  மேற்கொண்டுள்ளனர்.

மகளிர் சுய உதவிக் குழு ஆலோசனை கூட்டம் 

பாபநாசம், ஜூன் 15 - தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி, புத்தூர் ஊராட்சி அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஊராட்சித்  தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்தார். 

இதில் கணபதி அக்ரஹா ரம் இந்தியன் வங்கி மேலா ளர் அருள் ஜோதி, உதவி மேலாளர் பசுபதிநாத், வங்கி  பணியாளர் அருண், சுய உதவிக் குழு வட்டார ஒருங் கிணைப்பாளர் கவிதா, பிஎல்எப் நிர்வாகிகள், காலை உணவுத் திட்ட பணி யாளர்கள், சுய உதவிக்குழு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சுய உதவிக் குழுவின்  செயல்பாடுகள், அவர்களுக் கான தொழில்திறன் பயிற்சி கள், வங்கிக் கடன் உதவி,  குழுக்கள் எண்ணிக்கை அதி கரிப்பது, அவற்றை சிறப் பாக செயல்பட வைப்பது உள்ளிட்ட கருத்துகள் விவா திக்கப்பட்டன.

போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி, ஜூன் 15- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக்  மேல்நிலைப் பள்ளியில், அறந்தாங்கி வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் அறந்தாங்கி ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து போக்சோ சட்டம் தொடர்பான சட்ட விழிப்புணர்வு முகாமை நடத்தின. இந்த முகாமிற்கு வட்ட சட்டப் பணிகள் குழு தலைவர் சார்பு நீதிபதி ஏ.உமா மகேஸ்வரி தலைமை வகித்துப் பேசினார்.  மாவட்ட உரிமை யியல் நீதிபதி வீ.சிவகாமசுந்தரி முன்னிலை வகித்தார். வழக் கறிஞர்கள் ஆர்.மஞ்சுளா, ஆர்.ஜான்சிமகாராணி ஆகி யோர் சட்ட கருத்துரையாற்றினர்.
 

;