திருச்சிராப்பள்ளி, செப், 26- திருச்சி துவாக்குடிக்கு அருகில் அண்ணா வளைவு பகுதியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அருகாமையில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்த மதுக்கடையால் மாண வர்கள் பாதிக்கப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைக்கு அருகா மையில் உள்ளதால் பல விபத் துக்கள் நேரிட்டு வருகிறது. டாஸ்மாக் கடையில் மது அருந்து பவர்கள் பொதுமக்களுக்கு இடை யூறு செய்கிகின்றனர். அரசு டாஸ்மாக் கடையை உட னடியாக அப்புறப்படுத்த வேண் டும் என பலமுறை மனு கொடுத் தும் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை.இதனால் டாஸ்மாக் கடை யை உடனடியாக மூட வேண்டுமெ னக் கோரி இந்திய மாணவர் சங்கம் ஒரு சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தியது. அந்த போ ராட்டத்தின் எதிரொலியாக டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் மாணவர்களை அழைத்து திரு வெறும்பூர் வட்டாட்சியர் தலை மையில் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.இதில் மதுபான கடையை வேறொரு இடத்திற்கு மாற்றி விடுவோம் என திருவெறும்பூர் வட்டாட்சியர் உத்தரவாதம் அளித்தனர். ஆனால் அகற்றப்படவில்லை. இதனை கண்டித்தும் அந்த டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி முன்பு கிளை தலைவர் துளசிராமன் தலைமையில் போ ராட்டம் நடந்தது. போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.கே.மோகன், மாநிலக்குழு உறுப்பினர் பவித்ரன், புறநகர் மாவட்ட செயலாளர் ஆமோஸ், புறநகர் மாவட்ட தலைவர் வைரவளவன் ஆகியோர் பேசினர். கிளை நிர்வாகி எழிலரசி மற்றும் பலர் பங்கேற்றனர்.