districts

img

சிபிஎம் நடத்திய சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம்

திருவாரூர், பிப்.21-  சிகப்பு புத்தக தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? என்ற புத்தக வாசிப்பு இயக்கம் திருவாரூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிபிஎம் குடவாசல் தியாகி தங்கையன் நினைவு அலுவலகத்தில் கட்சியின் ஒன்றிய, நகரக்குழு சார்பாக சிகப்பு புத்தகத் தின நிகழ்வில் பங்கேற்ற சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் புத்தக வாசிப்பை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். லெட்சுமி தலைமை வகித்தார், குடவாசல் நகரக் குழு செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியக் குழுச் செயலாளர் டி.லெனின் ஆகிய முன்னிலை வகித்தனர். புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய, நகரக் குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி கிளைச் செயலாளர்கள், தோழர்கள் கலந்து கொண்டு, இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன என்ற புத்தகத்தை முழுமையாக வாசித்தனர்.  கும்பகோணம் பிப்ரவரி 21 சிவப்பு புத்தக தினத்தை முன்னிட்டு, உலக அளவில் நடைபெறும் வாசிப்பு பேரியக்கத்தில், மானுட சமூகத்தின் மீது அக்கறை கொண்டு, மாற்றம் நாடும் நோக்கத்தோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய இந்து ராஷ்ட்ரம் என்றால் என்ன? என்ற புத்தகம் வாசிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்பகோணம் மாநகரக் குழு சார்பில், கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் சிவப்பு புத்தக வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.  வாசிப்பு இயக்கத்தில் கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.‌ பாண்டியன், கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் ராஜகோபாலன், சேகர், ராமமூர்த்தி சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  திருத்துறைப்பூண்டி  திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர குழு சார்பில், சிவப்பு புத்தக தின வாசிப்பு இயக்கம் நகரச் செயலாளர் கே.கோபு தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் கலந்து கொண்டு சிகப்பு புத்தக தின வரலாறு மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். இவ்வியக்கத்தில் மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன்’ நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், நகர குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.  மேலும் நகரத்தில் தியாகி சிவராமன் நினைவகம், பெரியசிங்களாந்தி, ஏ,பி கிளைகள் மற்றும் பெரியநாயகிபுரம், மீனாட்சி வாய்க்கால் தெரு, எம்.பி.கே நகர், 7 ஆவது வார்டு உள்ளிட்ட ஏழு இடங்களில் வாசிப்பு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. வாசிப்பு இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.