districts

img

ரூ.285 கோடி நிகர லாபம்: 2 ஆம் காலாண்டில் சியூபி அசத்தல்

மன்னார்குடி, அக்.22- தமிழகத்தில் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்ப டும் சிட்டி யூனியன் வங்கியின் 2024-25 ஆம் நிதியாண்டின் 2 ஆம் காலாண்டு மற்றும் முதல் அரையாண்டுக்கான, வங்கியின் செயல்பாடு தொடர்பாக, சிஇஓ மற்றும் எம்.டி.யான டாக்டர் காம கோடி, திங்களன்று சென்னையில் கூறியதாவது: வங்கி நடப்பு நிதியாண்டின் 2 ஆம் காலாண்டில் மொத்த  வருமானம் 1,660 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் இதர  வருமானம் 226 கோடி ரூபாயாக உள்ளது. வங்கியின் மொத்த லாபம் 428 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 285 கோடி  ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் நிகர வராக்கடன் 1.82  சதவீதமாகவும், 1.82 சதவீதமாகவும், வங்கியின் சொத்தின் மீதான வருமானம் 1.59 சதவீதமாகவும் உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 3,241 கோடி ரூபாயாகவும், இதில் இதர  வருமானம் 418 கோடி ரூபாயாகவும், வங்கியின் நிகர லாபம்  550 கோடி ரூபாயாகவும் இருந்தது. முதல் அரையாண்டில் வங்கி மொத்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 91 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளது. வங்கியின் டெபாசிட் 57,369  கோடி ரூபாயாகவும், கடன்கள் 48,722 கோடி ரூபாயாகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் 7,859 கோடி ரூபாயில் இருந்து, 8,838 கோடி  ரூபாயாக உயர்ந்துள்ளது. வங்கி இப்போது 812 கிளைகள்  மற்றும் 1,682 ஏடிஎம் மையங்களுடன் செயல்பட்டு வருகிறது.