புதுக்கோட்டை, ஆக.23 - கறம்பக்குடி பகுதியில் காவிரியின் கடைமடைப் பகுதியான உழவயல் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசா யிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட் டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத் தார். காவிரியின் கல்லணைக் கால்வாய், தஞ்சாவூர் மாவட்டம் செல்லம்பட்டி யில் உள்ள கதவணை வழியாக புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதிக்கு உழவயல் என்னும் கிளை வாய்க்கா லில் பிரிகிறது. இந்த வாய்க்கால் கறம்பக்குடி ஒன்றியத்தில் ஆத்தரங்கரை விடுதி, கீராத்தூர், மணமடை, குழந்தி ரான்பட்டு உள்ளிட்ட 10 ஊராட்சிகள் வழி யாகச் சென்று மீண்டும் திருவோணம் வழியாக தஞ்சாவூர் மாவட்டத்திற்குள் செல்கிறது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படா ததால், வாய்க்கால் நெடுகிலும் செடி களும், புதர்களும் மண்டிக் கிடக்கின்றன. இதனால், தற்போது செல்லம்பட்டி கத வணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வாய்க்கால் வழியாக செல்லா மல், ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, அனைத்துப் பகுதிகளுக்கும் தண்ணீர் செல்லாமல் வீணாகிறது. எனவே, கத வணையை ஓரிரு நாள் அடைத்து வைத்துவிட்டு, போர்க்கால அடிப்படை யில் வாய்க்காலை முழுவதுமாக தூர்வாரி பின்னர் தண்ணீரைத் திறந்து விட வேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதோடு, மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளும் பயன டையும் விதமாக திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். நெப்புகை பெரிய ஏரியில் வடிகால் உடைப்பு ஏற்பட்டுள்ளதை உட னடியாக சரிசெய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பழுதடைந்துவரும் மின்மாற்றிகளை சரிசெய்து தடையில்லா மின் விநியோ கத்தை முறைப்படுத்த வேண்டும். திருமயம் லெனின் நகரில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலத்தில், 47 குடும்பங்கள் கடந்த 50 வருடத்திற் கும் மேலாக வீடுகட்டி குடியிருந்து வரு கின்றனர். இவர்களுக்கு சாலை வசதி, வீட்டு ரசீது, மின் விநியோகம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வீடுகளை இடிப்பதாக தற்போது அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதோடு, அவர்கள் அனைவருக் கும் வீட்டுமனைப் பட்டா வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஏ.ராமையன் பேசினார்.