districts

img

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு சார்பில் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.சுசிலா, துணைத் தலைவர் எம்.மகாலெட்சுமி (கீரனூர் பேரூராட்சி கவுன்சிலர்) நகரத் தலைவர் ஆர்.நிரஞ்சனாதேவி, செயலாளர் முத்துமாரி, விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.