districts

img

வாணிப கழக பொது ஊழியர் சங்க பெயர்ப் பலகை திறப்பு

நாகப்பட்டினம், ஜன.21 - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது ஊழியர்கள் சங்க பெயர்ப்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நாகப்பட்டி னம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  முதுநிலை மேலாளர் தமிழ்நாடு நுகர்பொருள்  வாணிபக் கழக மாவட்ட அலுவலக வாயி லில் நடைபெற்றது.  சங்கத்தின் கொடியை கீழ்வேளூர் எம்எல்ஏ வீ.பி.நாகைமாலி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். சிஐடியு உதவி பொதுச்  செயலாளர் வி.குமார் சங்கப் பெயர் பலகை  திறந்து வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சிஐடியு மாவட்ட துணை தலை வருமான வி.மாரிமுத்து வாழ்த்துரையாற்றி னார். சிஐடியு மாவட்ட செயலாளர் கே.தங்க மணி, சு.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.