நன்னிலம், ஜன.31 - நன்னிலம் ஒன்றியம் பழையார் சிக்கல் ஊராட்சியில் பல்வேறு அமைப்புகளில் இருந்து விலகி இளைஞர்கள் வாலிபர் சங்கத் தில் இணைந்தனர். பழையார் சிக்கல் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 27 பேர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணையும் நிகழ்ச்சிக்கு கட்சி கிளை செயலாளர் மலைப்பெருமாள் தலைமை வகித்தார். நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் செங்கொடியை ஏற்றி வைத்து பேசினார். வாலிபர் சங்க வெண் கொடியை சிபிஎம் மாவட்ட கவுன்சிலர் ஜெ. முகமதுஉதுமான் ஏற்றினார். புதிதாக அமைக் கப்பட்ட வாலிபர் சங்க கிளைக்கு தலைவராக சக்திவேல், செயலாளராக ஜெயக்குமார், பொருளாளராக வேணுகோபால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.எம்.சலாவுதீன், மாவட்டத் துணை செயலாளர் வி.தீனதயாளன், ஒன்றிய செயலாளர் எஸ்.சுரேந்தர், ஒன்றிய பொருளா ளர் கே.எம்.பாலா, சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினர் இப்ராகிம்சேட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.