districts

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பிடித்த தொகையை ரத்து செய்ய வேண்டும் அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் தர்ணா

திருச்சிராப்பள்ளி, செப்.20 - ஒன்றிய அரசு வழங்கும் அதே நாளில் அக விலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர் களுக்கு வழங்க வேண்டும். பழைய பென்சன்  திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீடு திட்ட பிடித்த  தொகையான ரூ.497-ஐ ரத்து செய்ய வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதி யர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவ லர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். பணி  நிறைவு நாளில் தற்காலிக பணிநீக்கத்தை தவிர்க்க வேண்டும். ஓய்வு பெறும் நாளுக்கு  ஆறு மாதங்களுக்கு முன்பே ஒழுங்கு நடவ டிக்கை முடிக்கப்பட வேண்டும். ஓராண்டுக்கு  மேல் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்து, தற்போது நிறுத்தப்பட்ட ரயில் பயண கட்டண சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க திருச்சி மாவட்டக் குழு சார்பில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அரைநாள் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சிராஜூதீன், மாவட்ட பொருளாளர் துளசிராமன், துணைத் தலைவர் நாகராஜன், வட்டத்தலைவர் வெள்ளைச்சாமி, வட்ட பொருளாளர் சந்திர சேகரன், வட்ட செயலாளர் கலைவாணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பு மாநில துணை பொதுச் செயலாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட துணைத் தலை வர் புருஷோத்தமன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மதிவாணன் நன்றி கூறினார்.

;