விபத்தைத் தடுக்க ‘தேவை நடவடிக்கை’
பாபநாசம், செப்.27- விபத்துக்களைத் தடுக்க மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டியை இடம் மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம் பேட்டை-கணபதி அக்ரஹாரம் சாலை முக்கியச் சாலையாகும். இந்தச் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில், திருவை யாறு, திங்களூர் சந்திரன் கோவில் ஆகியவற்றிற்கு இந்தச் சாலை வழியாகவும் செல்லலாம். இந்தச் சாலையில் கணபதி அக்ரஹாரம் அருகே வாகனப் போக்குவரத்திற்கு இடையூராக சாலையோரம் மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி உள்ளது. இரவு நேரங்க ளில் மேல்நிலைத் தொட்டியை கவனிக்கத் தவறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அப் பகுதியைச் சேர்ந்த விஜயராஜன் கூறுகையில் மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றும் வரை அந்த இடத்தில் ஒளிரும் வகை யில் வேகத் தடை அமைக்க வேண்டும். இதே போன்று அய்யனார் கோவில் அருகிலும் வேகத் தடை அமைக்க வேண்டுமென்றார்.
பேராவூரணியில் செப்.30 இல் மின்தடை
தஞ்சாவூர், செப்.28- பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்றுவட்டாரப் பகுதி களில் (நாளை) செப்டம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை செப்டம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை பேராவூரணி நகர், சேதுபாவாசத்திரம், பெருமகளூர், குருவிக் கரம்பை, ஒட்டங்காடு, திருச்சிற்றம்பலம், வாட்டாத் திக்கொல்லைக்காடு, திருவத்தேவன், ஆவணம், சித்துக் காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன் பட்டவூர், செருவாவிடுதி, ரெட்டவயல், நாட்டாணிக் கோட்டை, கள்ளம்பட்டி, கழனிவாசல், பள்ளத்தூர், நாடி யம், மல்லிப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக் காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை ஒன்பது மணி முதல் மாலை ஐந்து மணி வரை மின் விநி யோகம் இருக்காது என பேராவூரணி மின்வாரிய உதவிச் செயற் பொறியாளர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
வாலிபர் சங்கத்தில் இணைந்த இளைஞர்கள்
அறந்தாங்கி, செப்.28- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அறந்தாங்கி ஒன்றியக் குழு சார்பாக உறுப்பினர் சேர்க்கை ஒன்றியத் தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது எழுத்தாளர் எஸ்.கவிவர்மன் உறுப்பினர் உறுப்பி னர் பதிவைத் துவக்கி வைத்தார். ஆர்.கருணா, வழக்கறி ஞர் அலாவுதீன், ஒன்றியச் செயலாளர் பாண்டி, கெளதம், ஒன்றியப் பொருளாளர் சங்கர் உள்ளிட்ட பலர் இளை ஞர்களை வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்த்த னர்.
ஓலைப்பாடியில் புதிய ரேஷன்கடை பணி தொடக்கம்
பாபநாசம், செப்.26- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்துள்ள ஓலைப்பாடியில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 12.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணிகள் வியாழனன்று தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஊராட் சிக்குழு உறுப்பினர் தாமரைச் செல்வன், ஓலைப்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் விஜய் பிரசாத், பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பணி மேற்பார் வையாளர் செல்வராணி உட்பட பலர் பங்கேற்றனர்.
கொரட்டூர்-பெரியக்கோட்டை சாலைப்பணி துவக்க விழா
தஞ்சாவூர், செப்.28- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழனிவாசல் ஊராட்சியில், கொரட்டூர்-பெரியகத்திக் கோட்டை சாலை, ரூ.98.47 லட்சம் மதிப்பீட்டில், முதல மைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணி துவக்க விழா நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக் குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஒன்றி யக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுவாதி காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ரமா குமார் (கழனிவாசல்), குலாம் கனி (ஊமத்தநாடு), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாகிருஷ்ணன், நாகூரான் மற்றும் ராஜ்மோகன், ஊராட்சி உறுப்பினர் நீல கண்டன், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
விவசாயிகளுக்கு கிராம வேளாண் முன்னேற்றக் குழு சார்பில் பயிற்சி
தஞ்சாவூர், செப்.28- தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டா ரத்தில், பூவாணம் கிராம ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம வேளாண் முன்னேற்றக் குழு முன் பருவ பயிற்சி நடைபெற்றது. சேதுபாவாசத்திரம், வேளாண்மை உதவி இயக்கு நர்(பொ) ஜி.சாந்தி தலைமை வகித்து பேசுகையில், “கிராம முன்னேற்றத்திற்காக, அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து குழுவாகச் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் விதை கிராமத் திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாது காப்புத் திட்டத்தின் கீழ் ஆடுதுறை 51 நெல் ரகம், நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானியத் தில் வழங்கப்படுகிறது. விசைத் தெளிப்பான், பண்ணைக் கருவிகள், ஜிப்சம், சிங்க் சல்பேட், தார்பாலீன் தேவைப்படு வோர் உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்” என்றார். ஊராட்சித் தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு பேசினார். பூவாணம், வாத்தலைக்காடு, வீரியங்கோட்டை கிராம ஊராட்சிகளில் தென்னை வளர்ச்சி வாரியம் மூல மாக செயல்படுத்தப்பட உள்ள மண்புழு உர தயாரிப்பு குடில் அமைப்பது தொடர்பாக வயலாய்வும் மேற்கொள்ளப்பட்டது. துணை வேளாண் அலுவலர் து.சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
நாட்டு நலப்பணித் திட்ட துவக்க விழா
தஞ்சாவூர், செப்.28- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை, நாட்டு நலப் பணித் திட்டம் சிறப்பு முகாம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் க.தன லெட்சுமி தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெ.ராதிகா வரவேற்றார். பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் முகாமை துவக்கி வைத்தார். கல்விப்புரவலர் அ.அப்துல் மஜீத், பேரூராட்சி உறுப்பினர் ஹபீபா பாரூக், உதவித் தலைமை ஆசிரி யர் சுப.கார்த்திகேயன், ஆசிரியர்கள் ராஜேந்திர குமார், முரளி, கிருஷ்ணவேணி, மீனாகுமாரி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் அம்பிகா, நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் பலர் கலந்து கொண்ட னர். உதவித் தலைமை ஆசிரியர் ரெங்கேஸ்வரி நன்றி கூறினார். தொடர்ந்து, பள்ளி, விடுதி வளாகத்தை தூய்மை செய்தல், மரக்கன்றுகளை நடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாணவிகள் ஈடுபட்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில், வாலிபால் பயிற்சி பெற்று வரும், மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வா கியுள்ள வீராங்கனைகள் என்.தீபிகா, என்.நீவிகா, ஆர். அட்சயா, எம்.மதுபாலா, பி.தனுஷாஸ்ரீ, ஆர்.கபிலாஸ்ரீ ஆகியோர் சட்டமன்ற உறுப்பினரிடம் வாழ்த்துப் பெற்றனர்.
சாராய விற்பனையை தடுக்கத் தவறியதால் கொலையில் முடிந்த தகராறு
மயிலாடுதுறை, செப்.28- மயிலாடுதுறை திருவிழந்தூர் அப் பங்குளம் மேலதெருவை சேர்ந்தவர் மூக் கன். இவரது மகள் மாலதிக்கும், திருவிழந் தூர் ஊராட்சி பர்மா காலனியை சேர்ந்த பிரபாகரன் (30) என்பவருக்கும் கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள னர். திருமணம் நடந்த சில நாட்களிலேயே கணவரின் குடிப்பழக்கத்தால் மாலதி தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த பத்து நாட்களுக்கு முன்னர் தனது மனைவி யை சமாதானம் செய்வதற்காக வந்த பிரபா கரன் மாமனார் வீட்டிலேயே தங்கி விட்டார். சம்பவத்தன்று பிரபாகரன் குடிபோதை யில் வந்து மாலதியிடம் தகராறில் ஈடுபட் டுள்ளார். இப்போது வீட்டிற்கு அருகில் வசிக்கும் மாலதியின் சித்தப்பா பாக்கியம் (65) சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது பிரபாகரனுக்கும், பாக்கியத் திற்கும் ஏற்பட்ட தகராறில் இந்த நிலையில் வீட்டு வாசலில் படுத் துத் தூங்கிய பாக்கியம் தலையில் ரத்தம் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை யினர் பாக்கியத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பாக்கியத்தை கொன்றது அவரது மரு மகன் பிரபாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட் டார். இதற்கிடையே அப்பங்குளம் பகுதி யில் உள்ள அய்யனார் கோவில் பகுதியில் கடந்த நான்காண்டுகளாக சாராயம் விற் பனை செய்யப்பட்டு வருவதாகவும், பல முறை காவல்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சாராய விற்பனையைத் தடுத்திருந்தால், இந்தச் சண்டை கொலையில் முடிந்திருக் காது எனவும் அந்தப் பகுதி பெண்கள் குற் றம் சாட்டினர். இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட பெண்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டி ருந்த 22 சாராய மூட்டைகளை கைப்பற்றி எடுத்து வந்து கொலை செய்யப்பட்ட பாக்கி யம் வீட்டின் அருகே உள்ள திடலில் போட்ட னர். அதைக் கைப்பற்றிய மதுவிலக்கு காவல்துறையினர் அவற்றை தீ வைத்து அழித்தனர்.
இஸ்லாமிய மாணவர் மீது தாக்குதல்: திருப்பனந்தாளில் போராட்டம்
கும்பகோணம், செப்.28- கும்பகோணம் அருகே உள்ள திருப்ப னந்தாள் ஆதீன மடத்திற்குச் சொந்தமான மேல்நிலைப் பள்ளியில் மாணவரை தரக் குறைவாக பேசி தாக்கிய ஆசிரியர் மீது நட வடிக்கை எடுக்க இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சந்துரு கூறியிருப்ப தாவது:- கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஆதீன மடத்தின்நிர்வாகத்தில் இயங்கும் மேல்நிலைப் பள்ளியில் அதே ஊரைச் சேர்ந்த முஹமது ரிபாய் என்ற மாணவர் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். காலாண்டு தேர்வின் போது தேர்வு எழு தும் நேரத்தில் வகுப்பாசிரியர் செந்தில் குமார் முஹமது ரிபாயை தரக்குறைவாக மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் ஒருமை யில் பேசி கம்பால் தாக்கியுள்ளார். இது சம்பந்தமாக பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் காயம் பட்ட மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினார் ஆனால் பள்ளி ஆசிரியரோ, சிறுபான்மைப் பிரி வைச் சேர்ந்த மாணவர் என்ற கண்ணோட் டத்தோடு சாதி, மத ரீதியாக இழிவாகப் பேசி தாக்கிய சம்பவம் மாணவர்களின் எதிர் காலத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஈடு பட்டதாகத் தெரிகிறது. இஸ்லாமிய மாணவரைத் தாக்கிய ஆசி ரியர் செந்தில் குமார் மீது துறை ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட பள்ளிகல்வி அலுவலரிடம் மனு அளித் துள்ளனர். சம்பவத்தைக் கண்டித்து திருப்பனந்தாளில் மாணவர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அன்புமணி, ஹரிஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை:அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
தஞ்சாவூர், செப்.28- டெல்டா பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க உள்ளதாக தெரி விததார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தஞ்சாவூரில், வியாழக்கிழமையன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது; டெல்டா பகுதியில் தொழில்வளர்ச்சி யை மேம்படுத்த வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். விவசாயம் சார்ந்த தொழிற் பேட்டையை விரைவில் கொண்டு வரு வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. தென்னையைப் பொறுத்தவரை பொள்ளாச்சி மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் அதிகளவு சாகுபடி செய் யப்பபடுகிறது. தென்னை விவசாயி களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளோம். தென்னை சார்ந்த தொழிற்சாலை தொடர் பாக நான்கு நிறுவனங்களிடம் பேசியுள் ளோம். நிலம் தேர்வில் சிக்கல் இருக்கிறது. சில இடங்களில் நிலங்களைத் தேர்வு செய்துள்ளோம். இன்னும் ஒரு சில வாரங்களில் நிலத்தை அளவீடு செய்து விட்டு, முதலீட்டாளர்களை அழைத்து வர உள்ளோம். தமிழகத்தில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய டைடல் பார்க்குகளை இரண்டு மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில் கொண்டு வரு வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வரு கிறோம். தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தான் பெண்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. தொழில் முனைவோருக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது. விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை வரும்போது, விவ சாயிகளின் வளர்ச்சி அதிகமாகும்.” இவ் வாறு அவர் தெரிவித்தார்.
மகாதேவபட்டினம்-மேலப்பேட்டை மக்களின் கோரிக்கை நிறைவேறும் வட்டாட்சியர் உத்தரவாதம்
மன்னார்குடி, செப்.28- மன்னார்குடி வட்டம் மகாதேவபட்டினம் ஊராட்சி மேலப்பேட்டை பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்க ளுக்கு சுடுகாட்டுப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதி கள் செய்துதர வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் (இன்று) மன்னார்குடி வரு வாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மன்னார்குடி வருவாய் வட்டாட்சி யர் ந.கார்த்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில செயலாளர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலாளர் கே. தமிழ்மணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்கள் ஜி தாயுமானவன் கே. ஜெயபால், ஜி.ரகுபதி ஆர். செந்தில் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பட்டியலின மக்களுக்கான வீட்டுமனை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மயானப் பாதை நிலஅளவை செய்யப்பட்டு இப்பணி முடிந்தவுடன் இரண்டு வாரத்திற்குள் அமைக்கப்படும். புதிய மின்கம்பம் தெருவிளக்குகள் அமைப்பதற்கு ஊராட்சியின் மூலம் மின் பகிர்மான கழகத்திற்கு தொகை செலுத்தி மின் கம்பம் நடுவதற்கு நடவடிக்கை கள் எடுக்கப்படும். மேலப்பேட்டை மண் சாலைக்கு நில அளவை மேற் கொண்டு வருவாய் கணக்குகளில் உரிய திருத்தம் செய்யப்பட்டு அரசு கணக்கில் சாலை என வகை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததன் அடிப்படையில் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கபிஸ்தலம் அருகே பருத்தி ஏலம்
பாபநாசம், செப்.28- தஞ்சாவூர் மாவட்ட விற்பனைக் குழு சார்பில் கபிஸ்தலத்தை அடுத்துள்ள கீழக் கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்கா ணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் கும்பகோணம், அதைச் சுற்றியுள்ள கிரா மங்களிலிருந்து 943 விவசாயிகள் சராசரி 1000 குவிண் டால் பருத்தி எடுத்து வந்திருந்தனர். கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், சேலம், திருப்பூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த ஆறு வணிகர்கள் கலந்து கொண்டு குவிண்டாலுக்கு அதிக பட்சமாக ரூ.7,399, குறைந்தப்பட்சமாக ரூ.5,569, என விலை நிர்ணயம் செய்து பருத்திகளை பெற்றுச் சென்றனர்.
பொறையாரில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம்
மயிலாடுதுறை, செப்.28- மயிலாடுதுறை மாவட்டம்,பொறையார் கால்நடை மருந்தகத்தில் இலவச வெறிநாய் தடுப்பூசி முகாம் வியாழனன்று நடைப்பெற்றது. கால்நடை பராம ரிப்புத்துறை- தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் பொறை யார் தி லைப் ஆஃப் சில்ரன் அறக்கட்டளை இனைந்து நடத்திய இம்முகாமில் வளர்ப்பு நாய்கள், பூனைகள் மற்றும் சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலக வெறி நாய் தடுப்பு தினத்தை முன்னிட்டு இந்த முகாம் நடைபெற்றது.
கடுகூரில் 53 நாய்களுக்கு தடுப்பூசி
அரியலூர், செப். 28- உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், கடுகூர் கால்நடை மருந்தக வளாகத்தில் கால்நடை பராம ரிப்புத் துறை சார்பில் நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை கால்நடை பராமரிப்புத் துறை கோட்ட உதவி இயக்கு நர் சொக்கலிங்கம் துவக்கி வைத்தார். கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், ஓட்டகோயில் கால்நடை உதவி மருத்துவர்கள் வேல்முருகன், விஜயராஜ், ஜெயபாரதி, கால்நடை பராமரிப்பு உதவி யாளர் மாரிமுத்து ஆகியோர் கொண்ட குழுவினர் கன்னி, சிப்பிப் பாறை, கோம்பை உள்ளிட்ட 53 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினர்.
“2022-2023 சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை இன்னும் வந்து சேரவில்லை” நிகழ் சம்பா சாகுபடிக்கு நவ.15-க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
தஞ்சாவூர், செப்.28- தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிருக்கு நவ.15-ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசி யதாவது:- 48 ஆண்டுகளில் இல்லாத அளவாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1,93,943 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, இதுவரை 1,01,891 ஏக்கர் அறுவடை முடிந்துள்ளது. நிகழ் சம்பா பருவத்தில் தற்போது வரை 28,000 ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. சம்பா பருவத்திற்கு தேவையான விதைகள், உரங்கள் கையிருப்பில் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு சம்பா, தாளடி, கோடை பருவத்தில் பயிர்க் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த இப்கோ டோக்கியோ பொதுக்காப்பீடு நிறுவனம் மற்றும் பியூச்சர் ஜெனரலி இந்தியா இன்சூ ரன்ஸ் நிறுவனம் ஆகியவை தேர்வு செய்யப் பட்டுள்ளன. காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூ.36,100 அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் பங்க ளிப்புத் தொகையாக ஏக்கருக்கு ரூ.542-ஐ, நவ.15-ஆம் தேதிக்குள் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தில் பி.எம் கிசான் சம்மான் நிதியைப் பெறாமல் 4,445 விவசாயிகள் விடுபட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துப் பயன்பெற வேண்டும். மாவட்டத்தில் தற்போதைய கொள்முதல் பருவத்தில் (செப்.1 முதல்) 167 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை 15,527 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 3,520 விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் ரூ.35 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 2022-2023 சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை, தஞ்சாவூர் மாவட் டத்துக்கு இன்னும் வரவில்லை. தொகை வந்த வுடன் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத் தப்படும் என்றார்.
தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெறக் கோரிக்கை
புதுக்கோட்டை, செப்.28- புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல் நிலைப் பள்ளியின் முதல்வர் சிவப்பிரகா சம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர் மாதேஸ்வரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அப்பள்ளி யின் முதல்வர் சிவப்பிரகாசம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் து.தங்கவேலுவிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:- மாணவர்களை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளில், எதிர்பாராத நிலையில் மாண வர்கள் தவறான செய்கைக்கு உட்படுத்திக் கொள்ளும் போது, ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை என்பது இயல்பாகி விட்டது. இச்செயல் கற்பித்தல் பணி யோடு மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த நெறிப்படுத்துதலை செய்யும் ஆசிரியர் களுக்கு, இது தேவையற்ற செயல் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. வருங்கால சமூகத்துக்கு நல்ல குடி மகன்களை உருவாக்கும் ஆசிரியர்களின் செயலுக்கு இடையூறு ஏற்படாத வகை யில், ஒழுங்கு நடவடிக்கைகளை முறைப் படுத்த வேண்டும். அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி முதல்வர் சிவப்பிர காசம் மீதான இடைநீக்க நடவடிக்கை யைத் திரும்பப் பெற வேண்டும். பள்ளி களில் அத்துமீறும் சமூக விரோதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுத்து கற்பித்தல் பணி சுதந்திரமாக மேற்கொள்ள ஆசிரி யர்களுக்கு உரிய சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாணவர்களின் நெறிபிறழ் நடத்தை களை முறைப்படுத்த ஆசிரியர், பெற்றோர், காவல்துறை, வருவாய்த் துறை, மருத்து வத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை கள் சார்பில் கண்காணிப்புக் குழு ஏற்படுத்தி பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் கண்கா ணிப்புக் குழு அமைக்க வேண்டும் என மனு வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.