திருச்சிராப்பள்ளி, நவ.18- திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட திருவெறும்பூர் 41 ஆவது வார்டு பகுதிகளான காமராஜர் நகர், புற்றுக் கோயில் தெரு, சுருளி கோ வில் தெரு, ஏ.ஆர்.நகர், டி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பாதாளச் சாக்க டைப் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவ திக்கு உள்ளாகின்றனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பாதாளச் சாக்கடைப் பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் மாநக ராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வா கத்தை கண்டித்து நாற்று நடும் போ ராட்டம் நடத்துவதாக ஞாயிறன்று அப்பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனால் மாநகராட்சி அதி காரிகள் இரவோடு, இரவாக கான்கிரீட் மிக்சுகளை கொட்டி தற்காலிகமாக சாலையில் பேட்ஜ் ஒர்க்கில் ஈடுபட்டனர். இந்நிலையில் திங்களன்று சாலையில் பேட்ச் ஒர்க் செய்த மாந கராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், சேதம் அடைந்த சாலைகளை சீர மைத்துத் தர வேண்டும். பொது மக்களுக்கு தேவையான அடிப் படை வசதிகளை செய்து தர வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்க பகுதி செய லாளர் சந்தோஷ், நிவேதா ஆகி யோர் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் பா. லெனின் கண்டன உரையாற்றினார். போ ராட்டத்தில் யுவராஜ், ஜான்சி, சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர் ஜாகீர், கிளை செயலாளர்கள் லாரன்ஸ், ஜெயசந்திரன், மற்றும் செந்தில், வெங்கடேஷ், நிர்வாகி கள் மோகன், சுபாஷ், கவி, அசோக், வடிவேல், மௌலி உள்பட கலந்து கொண்டனர். இதையடுத்து, நடந்த பேச்சு வார்த்தையில் மாநகராட்சி அதி காரிகள் மற்றும் பாதாளச் சாக்க டைத் திட்டத்தின் ஒப்பந்த பணி அதிகாரிகள் விரைவில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதாகவும், குண்டும், குழியு மான சாலைகளை சீரமைத்துத் தருவதாகவும் எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தனர்.