districts

பாபநாசம் - அரியலூர் இடையே அரசு பேருந்துகளை இயக்கக் கோரி முதல்வரிடம் மனு

பாபநாசம், டிச.31 - மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா தஞ்சாவூ ருக்கு வந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம்  பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி நேரில் மனு வழங்கி னார்.  அந்த மனுவில், எனது பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம் பேட்டை அருகில்  இலுப்பகோரை, மாகா ளிபுரம், உள்ளிக்கடை, புதுத்தெரு, கிருஷ்ணாபுரம், கணபதி அக்ரஹாரம், மணலூர், தேவன்குடி, வீரமாங்குடி, சோ மேஸ்வரபுரம், பட்டுக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அச்சு வெல்லம் குடிசைத் தொழிலாக பாரம்ப ரிய முறையில் தயாரிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக பாபநாசம் பகுதியில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலத் தில் கரும்பு பயிரிடப்படுகிறது. தற்போது  தொழிலாளர்கள் போதுமான அளவில்  இல்லாத காரணத்தாலும், அச்சுவெல் லத்துக்கு போதுமான விலை கிடைக்கா ததாலும் அச்சு வெல்லம் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெருமள வில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அச்சு வெல்லத்துக்கு குறைந்தபட்ச ஆதார  விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.

                                                                                                                       பாபநாசத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் பணிமனை ஒன்றினை இந்தப் பகுதியில் ஏற்படுத்தி,  சுற்றுவட்டார பகுதிகளுக்கு புதிய வழித் தடத்தில் பேருந்துகள் இயக்குவதற்கு  வழிவகை செய்ய வேண்டும். சாலிய மங்கலம் அல்லது அம்மாபேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய பத்திரப் பதிவு அலுவலகத்தை உருவாக் கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.                    

                            பாபநாசத்திலிருந்து அண்டை மாவட்டமான அரியலூருக்கு வியாபார  நிமித்தமாகவும், அங்குள்ள பல்வேறு சிமெண்ட் ஆலைகளில் பணியாற்றி வரும் பாபநாசம், கபிஸ்தலம் பகுதி களை சேர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காகவும், பாபநாசம்-அரியலூர் இடையே நேரடி பேருந்து வசதி இல்லாத தால் இரண்டு அல்லது மூன்று பேருந்து கள் மாறிமாறி சுற்றிக் கொண்டு அரிய லூர் -பாபநாசம் இடையே சிரமத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.  மேலும் முக்கியமாக பாபநாசம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பகல் நேரங்களில் அரியலூர் வழியாக சென்னை செல்லும் பல்லவன் மற்றும் வைகை ரயில் வண்டிகளில் பயணம் செய்பவர்களின் வசதிக்காகவும் பாபநா சம்-அரியலூர் இடையே நேரடி புதிய பேருந்துகள் இயக்கப்படுமானால் பாப நாசம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள  ராஜகிரி, பண்டாரவாடை, அய்யம் பேட்டை, கபிஸ்தலம், கணபதி அக்ரஹா ரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு இலகுவாக இருக்கும் என்பதுடன், சென்னை செல்லும் வியாபாரிகள், மாண வர்களுக்கு இந்த பேருந்து வழித்தடம் பலனளிக்கும் வகையில் அமையும். எனவே பாபநாசம் - அரியலூர் இடையே அரசு போக்குவரத்துக் கழக  பேருந்துகளை இயக்க அரசு உடனடி யாக ஆவன வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.