districts

img

கலைஞர் கோப்பைக்கான கராத்தே போட்டியில் பேராவூரணி மாணவர்கள் வெற்றி

தஞ்சாவூர், டிச.7 - கடந்த டிச.5 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை), கோயம்புத்தூர் கலைஞர் கருணா நிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி யில் நடைபெற்ற, கலைஞர் கோப்பை -  2021-க்கான போட்டியில், பல்வேறு மாநில வீரர், வீராங்கனைகள் 1,500 பேர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி தாய் புடோகான் கராத்தே பயிற்சி  பள்ளியைச் சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் இந்த கராத்தே போட்டியில் பங்கேற்றனர்.  இதில், கட்டா, குமிட்டே, டீம் கட்டா ஆகிய  பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில், 15  பேர் தங்கப்பதக்கம், 15 பேர் வெள்ளிப்பதக் கம், 10 பேர் வெண்கலப்பதக்கம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், பயிற்சியாளர் கே.பாண்டியன், உதவி பயிற்சியாளர் அரவிந்த் ஆகியோருக்கு கிராம மக்கள், பெற்றோர் வாழ்த்து தெரி வித்தனர்.