districts

img

நூறு நாள் வேலை வழங்கக் கோரி சிந்தலவாடி மக்கள் ஆர்ப்பாட்டம்

கரூர், ஜூன் 28 - கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றி யம் சிந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட கிராமங் களில் உள்ள பொதுமக்களுக்கு நூறு நாள் வேலை பல மாதங்களாக வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு  உள்ளாகி வருகின்றனர்.  தங்களுக்கு உடனடியாக நூறு நாள் வேலை வழங்க வேண்டும், பணித் தள பொறுப் பாளர் தங்களது உறவினர்கள், தனக்கு வேண்டப்பட்ட நபர்களுக்கு மட்டும் வேலை வழங்குவதை கண்டித்தும், அனைத்து கிராம மக்களுக்கும் வேலையை பகிர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர்  மாவட்டக் குழு சார்பில் இலாலாப்பேட்டை யில் உள்ள சிந்தலவாடி ஊராட்சி அலுவல கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு விதொச கிளைச் செயலாளர் பட்டு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முத்துச் செல்வன், விதொச மாவட்டச் செயலாளர் பி.ராஜூ, மாவட்டக் குழு உறுப்பினர் வக்கீல்  சரவணன், மாவட்டத் தலைவர் கண்ணதா சன், விவசாயிகள் சங்க மாவட்டப் பொருளா ளர் சுப்பிரமணியன், ஒன்றியக் குழு உறுப்பினர் நாகராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.  பேச்சுவார்த்தை  போராட்டத்தை தொடர்ந்து கிருஷ்ணரா யபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் “அனைவருக்கும் உட னடியாக நூறு நாள் வேலை சுழற்சி முறை யில் வழங்கப்படும். பணித் தள பொறுப்பா ளர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதை கண்டித்ததுடன், இனிமேல் இது போன்ற  செயல்கள் நடைபெறாது” என உறுதி யளித்தனர்.

;