districts

லாரிகளுக்கு அபராதம்

திருச்சிராப்பள்ளி,  மே 20 - மோட்டார் வாகனச் சட்டப் படி லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வது, பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அதிக ஒலி  எழுப்பும் ஏர் ஹாரன் பயன்ப டுத்த கூடாது. இதையொட்டி போக்குவரத்து துறை சார் பில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் திருச்சி -  சென்னை தேசிய நெடுஞ்சா லையில் பழைய பால் பண்ணை அருகே ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலு வலர் குமார் தலைமையில்  மோட்டார் வாகன ஆய்வாளர் கள் அருண்குமார், முகமது மீரான் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர். இதில் அவ்வழியே வந்த 60  வாகனங்களில் 4 வாகனங் களுக்கு நோட்டீஸ் வழங்க பட்டது. 3 லாரிகள் அதிக பாரம்  ஏற்றி வந்ததாக வழக்கு பதியப்பட்டு ரூ.1 லட்சத்து 20  ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

;