districts

img

முடங்கி கிடக்கும் ஊராட்சி நிர்வாகங்கள் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்திட உடனே நிதி ஒதுக்கீடு வேண்டும்

மன்னார்குடி, ஜன . 27 நிதி இல்லாத சூழலில் ஊராட்சி மக்களின் உடனடித் தேவைகளை  கூட பூர்த்தி செய்திட முடியாத நிலையில் திரு வாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். எனவே உட னடியாக ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்ட குழு  கேட்டுக் கொண்டுள்ளது.  இது பற்றி கட்சி மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி அறிக்கையில் தெரிவித்துள்ள தாவது: திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சி மன்றங்கள் செயல் பட்டு வருகின்றன. இவற்றில்  தொழில்  வரி வீட்டு  வரைபட அனுமதிகான  கட்டண  வரி மற்றும் மனைவரி இனங்களில் ஓரளவிற்கு  வருவாய் உள்ள ஒருசில ஊராட்சிகளை தவிர ஏனைய பெரும்பாலான ஊராட்சி களில்  நிதியே  இல்லாத  அவல நிலை மிகப்பெரும் சவாலாக இன்று மாறியுள்ளது.ஒரு மாதத்திற்கு லட்சக்கணக்கான ரூபாய்கள்செலவழிக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகங் கள் அறவே நிதி இல்லாமல் திகைப்பில்  ஆழ்ந்துள்ளன.

 ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல மன்னார்குடி ஒன்றியத்தின் சித்திரையூர்  ஊராட்சிக்கு இர ண்டுமாத செலவினங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதி வெறும் ரூ.1400  மட்டுமே. இப்படிப்பட்ட அவல  நிலையில்  திருவாரூர் மாவட்டத்தின் ஊராட்சி நிர்வாகம் கேலிக் கூத்தாக மாறி உள்ளது. திருவா ரூர் மாவட்ட கிராம மக்கள் மிகப்பெரும் கோபத்திலும் ஆவேசத்தில்  உள்ளனர்.  இதை  அரசுகள் உணர வேண்டும் கடந்த ஆறு மாதமாக நிதியே இல்லாத ஊராட்சிகளுக்கு ஊராட்சி மக்களின் உடனடித் தேவைகளை ஓரளவிற்கு பூர்த்தி செய்திட ஏதாவது ஒரு இனத்தில் இருந்து   உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.  இவ்வாறு ஜி. சுந்தரமூர்த்தி தெரிவித்துள்ளார்

;