districts

img

டெல்டா மாவட்டங்களில் “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” திட்டம்

மயிலாடுதுறை, செப்.4-  மயிலாடுதுறை என்.கிட்டப்பா நக ராட்சி மேல்நிலைப் பள்ளியில் “எங்கள்  பள்ளி மிளிரும் பள்ளி”  திட்டத்தை ஆட்சியர ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து பேசிய ஆட்சியர், “பள்ளிக் கல்வித் துறை மூலம் மயி லாடுதுறை மாவட்டத்தில் உள்ள 488  அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு- பாது காப்புத் திட்டம் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் பள்ளி தூய்மைப் பிரச்சாரம் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் காய்கறித் தோட்டம் அமைத்தல், மறு சுழற்சி மற்றும் மறு சுழற்சியின் முக்கியத்துவம், பிளாஸ் டிக் பயன்படுத்துவதை தவிர்த்தல் போன்ற திட்டங்களை ஊக்குவிப்பதே எங்கள் பள்ளி மிளிரும் பள்ளித் திட்டத்  தின் நோக்கம்.  இந்தத் திட்டங்களை பள்ளிகளில்  சீராக செயல்படுத்த மாவட்ட அளவில்  வட்டார அளவில் பள்ளி அளவில் மற் றும் மாணவர்கள் துணைக்குழுக்கள் அமைக்கக வேண்டும். குழுக்கள் வாயி லாகத் இந்தத் திட்டம் செயல்முறை படுத்துவதையும், அனைத்துப் பள்ளி களிலும் செயல்படுத்துவதை உறுதி செய்யவும், உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கி ணைப்பு மற்றும் பங்கேற்பு உறுதி செய்தலை கண்காணிக்க வேண்டும் வேண்டும் என  அவர் ஆசிரியர்கள், மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை தூய்மையான பள்ளி உறுதிமொழியை எடுக்க வேண்டு மென அறிவுறுத்தினார். மேலும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவோருக்கு சிறந்த தூய்  மையான பள்ளி விருது, சிறந்த சுற்றுச்சூழல் வழிகாட்டு ஆசிரியர் விருது, சுற்றுச்சூழல் நட்சத்திரம் விருது  மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றார் ஆட்சியர்.

தொடர்ந்து என்.கிட்டப்பா நகராட்சி  மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவி கள் பங்கேற்ற சுற்றுச் சூழல் விழிப்பு ணர்வு பேரணியை ஆட்சியர்  கொடிய சைத்துத் துவக்கி வைத்தார். முன்ன தாக பள்ளி தூய்மை விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில், முதன்மைக் கல்வி அலு வலர் அம்பிகாபதி, மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்த சாரதி ஆகியோர் கலந்துகொண்டனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘எங்கள்  பள்ளி, மிளிரும் பள்ளி’ பிரச்சாரத்தை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் திங்கள்கிழமை தொடங்கி வைத்து  மரக்கன்றுகளை நட்டார். தொடர்ந்து  பேசிய ஆட்சியர், “பள்ளி வளாகங்க ளில் குவிந்து கிடக்கும் எலெக்ட்ரானிக் கழிவுகள் உள்ளிட்ட அனைத்துக் கழிவு களும் அகற்றப்படும். ஒவ்வொரு பள்ளி  வளாகத்திலும் 20 மரக்கன்றுகள் நடப்படும்” என்றார். திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெறும்பூர் அருகே உள்ள வாழவந் தான்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பிரச்சாரத்தை ஆட்சியர் எம்.பிர தீப்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி யில் பேசிய ஆட்சியர், “பள்ளிகளில் மட்டுமல்லாது வீடுகளிலும் தூய்மை  மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்து வத்தை மாணவர்களுக்கு உணர்த்தவே  இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்றார். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் ஐ.எஸ். ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்  பள்ளியில் தோட்டம் அமைப்பதற்கான விதைகளை விதைக்கும் பணியை ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார்.  கரூர் கரூர் மண்மங்கலம் அரசு மேல்  நிலைப் பள்ளியில் பிரச்சார விழிப்பு ணர்வு பேரணியை ஆட்சியர் த.பிரபு சங்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.