பாபநாசம், ஜூன் 22-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கீழ கொட்டையூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தஞ்சாவூர் விற்பனைக் குழு செயலாளர் சரசு தலைமையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.
கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் பிரியமாலினி, விளம்பரம் மற்றும் பிரச்சார கண்காணிப்பாளர் சித்தார்த்தன், மேற்பார்வையா ளர் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம், இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சராசரி 1850 குவிண்டால் பருத்தி கொண்டு வரப்பெற்றது.
கும்பகோணம், பண்ருட்டி, விழுப்புரம், குத்தாலம், சேலம்,தேனி சார்ந்த 13 வியாபாரிகள் மற்றும் இந்திய பருத்திக் கழக அலுவலர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு அதிக பட்சமாக குவிண்டாலுக்கு ரூ.6862, குறைந்தபட்சம் ரூ.5659, சராசரி ரூ.6439 என விலை நிர்ணயம் செய்தனர்.