districts

img

செங்குளத்தில் 464 அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திறப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.27- வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்  துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம், திருச்சி ராப்பள்ளி மாவட்டம், செங்குளத்தில் ரூ.116.55 கோடியில் கட்டப்பட்டுள்ள 464 தமிழ்நாடு அரசு அலுவலர் வாடகை குடி யிருப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயல கத்தில் இருந்து காணொலி வாயிலாக வியாழனன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி, செங்குளம் காலனியில் நடைபெற்ற விழா வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் குத்து  விளக்கு ஏற்றி வைத்து அரசு அலுவலர் குடி யிருப்பினை பார்வையிட்டு, பயனாளி களுக்கு குடியிருப்புக்கான ஆணைகளை வழங்கினார்.  செங்குளம் பகுதியில் 3.30 ஏக்கர் நிலப்  பரப்பில் 464 அரசு ஊழியர் வாடகை அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.