districts

img

பெண்கள், குழந்தைகள் மீதான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துக! மாதர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

நீடாமங்கலம், ஜூன் 12 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தின் நீடாமங்கலம் ஒன்றிய மாநாடு எம்.அம்ச வள்ளி தலைமையில் நடைபெற்றது. முன்ன தாக மூத்த தோழர் ஜோ.ஜெருசலேம் மாநாட்டுக்  கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.சமத்துவம்  மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கை மற்றும்  வரவு-செலவு அறிக்கை களை ஒன்றியச் செயலாளர் ஆர்.சுமதி முன் வைத்தார்.  புதிய தலைவராக எஸ்.பசுபதி, செயலாள ராக எம்.அம்சவள்ளி, பொருளாளராக டி.ராதிகா  ஆகியோரை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில  துணைச் செயலாளர் கலைச்செல்வி புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும் மாநாட்டை முடித்து வைத்தும் சிறப்புரையாற்றினார்.  சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.  நூறு நாள் வேலையை முறைப்படி நகர்ப்புறத் திற்கு அமல்படுத்த வேண்டும். காலிப் பணி யிடங்களில் பெண்களுக்கான இடஒதுக் கீட்டை செயல்படுத்த வேண்டும். நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள்  அனைத்தையும் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;