districts

புதிய அதிநவீன பல் மருத்துவ இருக்கை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி, மே 5

   தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. பல் சிகிச்சை பிரிவை நவீனப்படுத்தும் வகையில், அதிநவீன உபகரணங்களுடன் கூடிய புதிய பல் மருத்துவ இருக்கை தமிழக அரசு சாா்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நவீன பல் மருத்துவ இருக்கையில், தானியங்கி விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

   இதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதன் மூலமாக பல் வோ் சிகிச்சை, பல் கட்டுதல், பற்களை சீரமைத்தல், முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தாடை மற்றும் முக அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.