districts

img

பொதுத் தேர்வு மாணவர்களுக்கு பேனா வழங்கிய எம்எல்ஏ

மயிலாடுதுறை, பிப்.27 - மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்ளிட்ட 63 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,  மாணவிகள் பொதுத் தேர்வு எழுதவுள்ளனர்.  இம்மாணவர்களுக்கு பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் தனது சொந்த செலவில் ரூ.90 மதிப்பு கொண்ட  பேனாக்களை வாங்கி, ஒவ்வொரு பள்ளிக் கும் நேரில் சென்று வழங்கி வருகிறார். செவ்வாயன்று பொறையார், தில்லையாடி, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல் பள்ளி களுக்குச் சென்ற எம்எல்ஏ நிவேதா எம்.முரு கன் பள்ளி மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து, ஒவ்வொருவருக்கும் பேனாக் களை வழங்கி வாழ்த்தினார்.  நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார், தரங்கை பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன், தரங்கை பேரூர் செயலாளர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.