districts

img

முந்திரி, நறுமண தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை

புதுக்கோட்டை, ஏப்.18 - புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை பகுதியில் அரசு முந்திரி, நறு மண தொழிற்சாலைகள் அமைக்க நட வடிக்கை எடுப்பேன் என்றார் திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை.வைகோ. இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி தொகுதி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை. வைகோ புதன்கிழமை புதுக்கோட்டை,  கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகு திக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில்  சூறாவளி சுற்றுப்பயணம் மேற் கொண்டு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: எனக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட  பொதுமக்களின் அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்ய முன்னுரிமை அளிப்பேன். விவசாயிகளின் கனவுத் திட்டமான காவிரி, வைகை, குண்டாறு  திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நட வடிக்கை எடுப்பேன். புதுக்கோட்டை நகரில் இரண்டு  ரயில்வே மேம்பாலங்கள் கட்டு வதற்கும், புதிய தொழிற்சாலை கொண்டு வந்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுப் பேன். கந்தர்வகோட்டை பகுதியில் அரசு முந்திரி ஆலை மற்றும் நறுமண  ஆலைகளைக் கொண்டு வந்து விவசா யம் சார்ந்த வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். இவ்வாறு அவர் வாக்குறுதி அளித் தார். வேட்பாளருடன் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சட்டப்பே ரவை உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), டாக்டர்  வை.முத்துராஜா (புதுக்கோட்டை), முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, திமுக வடக்கு மாவட்டச்  செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன்,  மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், விசிக மாவட்டச் செயலாளர் இளமதி  அசோகன், திமுக நகரச் செயலாளர் ஆ. செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.