districts

மே 1 திருச்சியில் வாலிபர் சங்க  சைக்கிள் பிரச்சார பயண பொதுக்கூட்டம்

திருச்சிராப்பள்ளி, ஏப்.7 - இளைஞர்களுக்கு வேலை கேட்டு சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய தமிழகத்தில் நான்கு முனைகளில் இருந்து  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சார பயணம் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கி மே 1 ஆம் தேதி திருச்சியில் சங்க மிக்கிறது. அன்றைய தினம் திருச்சியில் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது.  இதற்கான வரவேற்பு குழு கூட்டம் சுருதி மஹாலில் வியாழனன்று  நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலை மை வகித்தார். மாநில செயலாளர் பாலா, மாநில இணை செயலாளர்  போஸ், மாவட்ட செயலாளர் லெனின், முன்னாள் மாவட்ட செய லாளர்கள் ராஜா, வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் 200 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.  வரவேற்புக் குழு தலைவராக எஸ். ஸ்ரீதர், செயலாளராக பா.லெனின், பொருளாளராக எஸ். சுரேஷ், வர்க்க வெகுஜன அரங்கங்களில் மாவட்ட தலைவர்கள் வரவேற்பு குழு துணைத் தலைவர்களாகவும், வர்க்க வெகுஜன அரங்கங்களில் மாவட்ட செயலாளர்கள் துணை செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் விளம்பரக் குழு, நிதிக்குழு, பிரச்சாரக் குழு, பொதுக்கூட்ட குழு, தொண்டர்கள் குழு தேர்வு செய்யப்பட்டது. முன்னதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுபதி வரவேற்றார். முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

;